ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணித்த 51 வயது முதியவர்!

3 hours ago
ARTICLE AD BOX

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் இயற்கை வளத்தை பாதுகாப்பது குறித்து 3,700 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் 51 வயது முதியவர்.

ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணித்த 51 வயது முதியவர்!லடாக் பகுதியில் என்சிசி அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கிர்தாரி லால் வயது 51 இவர் இந்தியா முழுவதும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணம் தோன்றி 24.12.2024 அன்று ஜம்மு காஷ்மீரில் இருந்து சைக்கிள் மூலம் தனி நபராக  இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ,டெல்லி, ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து தமிழ்நாடு வழியாக  கன்னியாகுமரி பகுதியில் பயணத்தை முடிக்கிறார்.

ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணித்த 51 வயது முதியவர்!இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக கன்னியாகுமரி செல்லும் முதியவர் சைக்கிள் மூலம் தனிநபராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதில் போதை பழக்கத்தால் தனி மனிதனை மட்டும் பாதிக்கப்படுவதில்லை ஒட்டுமொத்த குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கப்படுகிறது. இதனால் அனைவரும் ஒன்றுபட்டால் தூய்மையான, ஆரோக்கியமான வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்.

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 51 வயது முதியவர் 3,700 கிலோ மீட்டர் சைக்கிள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article