செவ்வாய் பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. இதை பண்ணுங்க

4 hours ago
ARTICLE AD BOX

செவ்வாய் பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. இதை பண்ணுங்க

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி: மிதுனம் ராசியில் வக்ர நிலையில் உள்ள செவ்வாய் கடகத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகத்தின் வக்ர நிலை பெயர்ச்சி மேஷம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் மிதுன ராசியில் உள்ளார். ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூன் 6 ஆம் தேதி வரை அவர் கடகம் ராசியில் நீட்ச நிலையில் இருக்க போகிறார். சுமார் 63 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்க உள்ளது. நீட்ச நிலை என்பது ஆங்காங்கே சில பிரச்னைகள் நிலவினாலும் சில நல்ல பலன்களும் கிடைக்கும். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது மேஷ ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்தப் பதிவில் காணலாம்.

Sevvai peyarchi Mesham

மேஷம்: மேஷம் ராசிக்கு செவ்வாய் தான் ராசி நாதன். உங்கள் ஒன்பதாம் வீட்டு அதிபதியான குரு, வருகிற மே மாதம் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில நல்ல பலன்கள் கிடைக்கும். செவ்வாய் நீட்சத்துக்கு செல்வதால் எதிரிகளின் பலம் குறையும். தோல்வியின் விளிம்பில் இருந்து கூட வெற்றியை பெறுவதற்கான யோகம் கிடைக்கும். உத்யோகத்தில் பணியிட மாற்றம் இருக்கும். இருப்பினும் அது தற்காலிகம் தான்.

ஆரோக்கியம்

எதிலும் சந்தேகம், தோல்வி பயம் எட்டிப் பார்க்கும். மனதில் எதிர்மறையான சிந்தனைகள் வந்து செல்லும். செவ்வாய் நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எட்டி பார்க்கும். சகோதரர்களுடன் பிரச்னைகள் வந்து செல்லும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

கவனமோ கவனம்

வயதானவர்களுக்கு ஆரோக்கிய பிரச்னை ஏற்படும். எனவே உடல்நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பணிச்சுமை மிகவும் அதிகரிக்கும். வார்த்தைகளால் பிரச்னைகள் வரும் என்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கலாம். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் திட்டமிட்ட பலன்களை ஜூன் முதல் வாரத்துக்கு பிறகு செய்வது நல்லது. வண்டி, வாகனத்தில் கவனம் தேவை.

பரிகாரம்

பிரச்னைகள் நீங்க முருகன் வழிபாட்டை அதிகரிக்க வேண்டும். தினசரி கந்த சஷ்டி கவனம் மற்றும் சுப்ரமணிய புஜங்கம் தினமும் உச்சரிக்க வேண்டும். இதன் மூலம் மனக்குழப்பங்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

More From
Prev
Next
English summary
Mars is transiting in Gemini. In this astrology article, you can learn about the benefits Mesham (Aries)will get from Mars transiting and what things they should be careful about.
Read Entire Article