செவ்வாய் கிரகம் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது? - புதிய ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

22 hours ago
ARTICLE AD BOX

பூமிக்கு அருகாமையில் இருப்பதாலும், கடந்த சில தசாப்தங்களாக பார்வையிட்ட ஏராளமான விண்கலங்களாலும் செவ்வாய் கிரகம் சூரிய மண்டலத்தில் மிகவும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் இருப்பது குறித்து விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

Mars
`செவ்வாய் கிரகம் செல்ல ஆசை!' - நெற்றியில் எலானின் பெயர் மற்றும் ராக்கெட்டை பச்சை குத்திக்கொண்ட நபர்!

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உலர்ந்த ஹேமடைட் ( hematite) என்ற கனிமம் தான் செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் இருக்க காரணம் என்று நம்பப்பட்டது. அதாவது மேற்பரப்பில் திரவ நிலை இல்லாததால், செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறம் ஹெமடைட் போன்ற உலர்ந்த இரும்பு ஆக்சைடுகளிலிருந்து வந்தது என்று நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது.

ஆனால் ஃபெரிஹைட்ரைட் எனப்படும் தண்ணீரைக் கொண்ட இரும்பு ஆக்சைடுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Nature Communications என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரையில், தண்ணீரைக் கொண்ட ஃபெரிஹைட்ரைட் இரும்பு ஆக்சைடு செவ்வாய் கிரகம் முழுவதும் பரவியுள்ளதாகவும், இவை துருப்பிடித்ததன் காரணமாக சிவப்பு நிறம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்தை தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஃபெரிஹைட்ரைட் கனிமம், குளிர்ந்த நீரால் உருவாகிறது. செவ்வாய், வறண்ட கிரகமாக மாறுவதற்கு முன்பு தண்ணீரைத் தாங்கும் திறன் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாயில் இருக்கும் நாசா-வின் ரோபோக்கள்

இது செவ்வாய் கிரகம் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதையும், அது வாழத் தகுதியானதா என்பதையும் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றக்கூடும் எனவும் கூறப்படுகிறது.தற்போது செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் நாசாவின் Perseverance ரோவர் பூமிக்கு கொண்டு வரும் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

`டீச்சரே..' -குரலை வைத்து மாணவர்களின் பெயர் சொல்லும் ஆசிரியை... கேரளா கொண்டாடும் நவ்யா ஸ்ரீ!
Read Entire Article