Doomsday Fish: மேற்பரப்புக்கு வரும் ஆழ்கடல் மீன்கள் - மக்கள் அஞ்சுவது ஏன்?

18 hours ago
ARTICLE AD BOX

oarfish

மிகவும் மெல்லியதாக சில்வர் நிறத்தில் மின்னக் கூடிய அரிய ஆழ்கடல் உயிரினமான oarfish மெக்ஸிகோவின் தெற்கு பாகா கலிஃபோர்னியா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்கள் ஆழ்கடலில் இருந்து மேற்பரப்புக்கு வருவதே மிக மிக அரிதானது.

இந்த மீன்கள் கடலுக்கு அடியில், 660 முதல் 3280 அடி ஆழத்தில் வசிக்கின்றன. இவை மனிதர்களால் காணப்படும்போதெல்லாம் இறந்த புயலில் அடித்துவரப்பட்டதாகவே இருக்கும். ஆனால் மெக்ஸிகோ கடற்கரையில் அதனை உயிருடன் பார்த்திருக்கின்றனர்.

இந்த மீனை கடற்கரையில் பார்த்தவர்கள் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்றாலும், கண்ட உடனே அதன் இனத்தை அறிந்துள்ளனர். ஏனென்றால் oarfish நாட்டுப்புற கதைகளிலும் இதிகாசங்களிலும் அதிகம் இடம்பெற்றுள்ளது. இது நன்கு வளர்ந்தால் 36 அடி நீளம் வரை வளரும் என்பதால் வளர்ந்த oarfish-ஐ பார்த்தவர்கள் நிச்சயம் கதைகள் சொல்லியிருக்கக் கூடும்.

புராணங்களில் இந்த மீன்கள் இயற்கை பேரழிவுகளை முன்னறிவிப்பவையாகக் கூறப்படுவதனால் இவற்றை 'Doomsday Fish' என அழைக்கின்றனர்.

கடலுக்குள் ஒளி ஊடுறுவ முடியாத பகுதியில் oarfish வசிக்கும். உலகில் மிகவும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பகுதி அதுதான் என்கின்றனர்.

A deep-sea creature rarely seen by humans called the oarfish has washed ashore in Mexico!

Legend has it that this mysterious “doomsday fish” only emerges from the ocean’s depths when disaster is near
pic.twitter.com/NciJ7jbEbo

— FearBuck (@FearedBuck) February 18, 2025

Angler fish

இந்த oarfish காணப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்புதான் மற்றொரு ஆழ்கடல் இருளில் வசிக்கு மீனான ஆஞ்செலர் மீன், ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகள் அருகில் கடற்மேற்பரப்பில் கண்டறியப்பட்டது. ஃபைண்டிங் நீமு திரைப்படத்தில் தலையில் பல்புடன் காண்டப்படும் மீன்தான் அது. நிஜத்தில் 6 இன்ச் அளவுதான் இருக்கும்.

அந்த மீனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மீன் மேற்பரப்புக்கு வரவில்லை என்றால் அதற்கு சூரியன் என்ற ஒளி மூலம் இருப்பது வாழ்நாள் முழுமைக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆழ்கடல் மீன்கள் இப்படி கடலின் மேற்பரப்புக்கு வருவது மிக மிக அரிதானது.

கடந்த ஆண்டு oarfish 3 முறை காணப்பட்டுள்ளது. ஆழ்கடலில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மீன்கள் மேற்பரப்புக்கு வர காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

I’m not crying, you are..
This little angler fish swam thousands of metres to see what was on the surface, incredible.

The little angler fish who wanted to see a light she didn’t make herself on her last day…. pic.twitter.com/AZPKdT2UHb

— e (@jelinaangelll) February 18, 2025

பேரழிவின் முன்னெச்சரிக்கையா?

ஆனால் புராணங்கள் படி இந்த ஆழ்கடல் மீன்கள் கடற்பரப்புக்கு வருவது அழிவின் முன்னறிவிப்பாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

2011ம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படும் முன்பு 20 oarfish மீன்கள் மேற்பரப்பில் காணப்பட்டதால் இந்த மீன்கள் வருகை நிலநடுக்கத்தின் அடையாளம் என நம்பினர். ஆனால் 2019ம் ஆண்டு ஜப்பானிய ஆய்வாளர்கள் oarfish வருகைக்கும் நிலநடுக்கத்துக்கும் தொடர்பில்லை என கண்டறிந்தனர்.

Clownfish: 'பெண்ணாக மாறும் ஆண் மீன்' - நீமூவின் வாழ்க்கையும், டிஸ்னி மறைத்த உண்மையும்!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article