செய்கைனா இதுதான்.. ரூ.15,241 போதும்.. 8300mAh பேட்டரி.. 16GB ரேம்.. 15W சார்ஜிங்.. 2K டிஸ்பிளே.. எந்த மாடல்?

10 hours ago
ARTICLE AD BOX

செய்கைனா இதுதான்.. ரூ.15,241 போதும்.. 8300mAh பேட்டரி.. 16GB ரேம்.. 15W சார்ஜிங்.. 2K டிஸ்பிளே.. எந்த மாடல்?

Gadgets
oi-Harihara Sudhan
| Published: Sunday, March 16, 2025, 23:30 [IST]

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டேப்லெட் பிரியர்கள் அறக்க பறக்க ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் 2K ரெசொலூஷன் கொண்ட 10.5 இன்ச் டிஸ்பிளே, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8300mAh பேட்டரி, ஓரியாலிட்டி ஆடியோ கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுக்கும் ரியல்மி பேட் 2 லைட் 4ஜி (Realme Pad 2 Lite 4G) டேப்லெட் கிடைக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி பேட் 2 லைட் 4ஜி பிளிப்கார்ட் விற்பனை (Realme Pad 2 Lite 4G Flipkart Sale): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1,758 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

செய்கைனா இதுதான்.. ரூ.15,241 போதும்.. 8300mAh பேட்டரி.. 16GB ரேம்!

அதேபோல ரூ.14,999ஆக மார்கெட் விலை கொண்ட 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கும் ரூ.1,324 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ஆகவே, இந்த ரியல்மி டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.15,241 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதில் 4ஜி கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், பல்வேறு பீச்சர்கள் இருக்கின்றன.

ரியல்மி பேட் 2 லைட் 4ஜி அம்சங்கள் (Realme Pad 2 Lite 4G Specifications): இதுவொரு 4ஜி மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Octa Core 6nm MediaTek Helio G99) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு டேப்லெட்களுக்கு கிடைக்கும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) வருகிறது.

ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு எதிர்பார்க்கலாம். இந்த டேப்லெட்டில் 2K ரெசொலூஷன் கொண்ட 10.5 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஐ கம்போர்ட் (Eye Comfort) சப்போர்ட் மட்டுமல்லாமல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, டிஸ்பிளேவில் பட்ஜெட்டைவிட கூடுதல் பீச்சர்களே கிடைக்கின்றன. அதேபோல ஆடியோ பீச்சர்களும் குவாட் ஸ்பீக்கர்களுடன் (Quad Speakers) பட்டையை கிளப்பி இருக்கிறது. இதற்கு ஓரியாலிட்டி ஆடியோ (OReality Audio) சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி பேட் 2 லைட் 4ஜி டேப்லெட்டில் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. ஏனென்றால், 15W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 14 மணி நேரங்களுக்கு மேல் வீடியோபிளே கொடுக்கும் 8300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ரியல்மி பேட் 2 லைட் 4ஜி மாடலில் 1080P வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

இந்த மாடலில் ஸ்பேஸ் கிரே (Space Grey) மற்றும் நெபுளா பர்பிள் (Nebula Purple) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ பூஸ்ட் என்ஜின் (AI Boost Engine), 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) போன்ற பீச்சர்கள் வருகின்றன. கம்மி பட்ஜெட்டில் பக்கா பீச்சர்கள் வேண்டுமானால், இந்த டேப்லெட்டை தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
32 Percent Discount on Realme Pad 2 Lite With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Read Entire Article