கேபிள் TV க்ளோஸ்.. ரூ.450 க்கு Airtel மொபைல் மற்றும் DTH சேவை.. மொத்த தமிழ்நாடும் வெயிட்டிங்!

14 hours ago
ARTICLE AD BOX

கேபிள் TV க்ளோஸ்.. ரூ.450 க்கு Airtel மொபைல் மற்றும் DTH சேவை.. மொத்த தமிழ்நாடும் வெயிட்டிங்!

News
oi-Muthuraj
| Published: Monday, March 17, 2025, 14:36 [IST]

பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக ஒரு புதிய மொபைல் + டிடிஎச் பிளானை (New Mobile + DTH Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.450 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒரே ரீசார்ஜில் மொபைல் மற்றும் டிடிஎச் (டிஜிட்டல் டிவி) நன்மைகளை பெற முடியும்.

இதனால் ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை மொபைல் + டிடிஎச் பிளான் என்று அழைக்கிறது. சுவாரசியமாக இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி நன்மையும் (Unlimited 5G Benefit) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.448 ஆகும் மற்றும் தற்போதைக்கு அசாமில் (Assam) உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்க்ளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற பிராந்தியங்களில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.

கேபிள் TV க்ளோஸ்.. ரூ.450 க்கு Airtel மொபைல் மற்றும் DTH சேவை!

ஏர்டெல் ரூ.448 மொபைல் + டிடிஎச் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் (Airtel Rs 448 Mobile + DTH Plan Details) கிடைக்கும்? இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஏர்டெல்லின் புதிய ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

டெய்லி டேட்டா ஒதுக்கீட்டை மீறிய பிறகு, இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். வழக்கமான ப்ரீபெய்ட் நன்மைகளுடன் சேர்த்து இந்த திட்டத்தில் டிடிஎச் நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் பயனர்கள், ஏர்டெல் டிஜிட்டல் டிவி (Airtel Digital TV) சந்தாவின் கீழ் 28 நாட்களுக்கு 250 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை அணுக முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மற்ற கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (5ஜி நெட்வொர்க் பகுதிகளில் மட்டும் கிடைக்கும்), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பில் உள்ள கன்டென்ட்களுக்கான இலவச அணுகல், மூன்று மாதங்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோட்யூன்ஸ் ஆகியவைகள் கிடைக்கும்

அதாவது அசாமில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.16 என்கிற செலவின் கீழ் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், டெய்லி டேட்டா, 5ஜி டேட்டா மற்றும் டிடிஎச் சேவைகளை அனுபவிக்க முடியும். அசாம் மாநிலமானது ஏர்டெல் நிறுவனத்தின் கோட்டை என்றே கூறலாம். ஏனென்றால் அங்கு ஏர்டெல் தான் அதிக எண்ணிக்கையிலான வயர்லெஸ் சந்தாதாரர்களை கொண்டுள்ள டெலிகாம் ஆப்ரேட்டர் ஆக உள்ளது.

டெலிகாம் துறை தொடர்பான மற்ற முக்கிய செய்திகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, ரூ.299 மற்றும் அதற்கு மேலான விலையில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ அன்லிமிடெட் என்கிற புதிய ஆபரை (Reliance Jio Unlimited Offer) அறிவித்துள்ளது. இதன்கீழ் 90 நாட்களுக்கான இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா (Free JioHotstar subscription) கிடைக்கிறது.

இந்த புதிய சலுகையின் கீழ் ஜியோ பயனர்கள், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ள கன்டென்ட்களை 90 நாட்களுக்கு இலவசமாக பார்க்க முடியும், மேலும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகளை 4கே தரத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். ஜியோ பயனர்கள் இந்த சலுகையை (இன்று முதல்) மார்ச் 17, 2025 முதல் பெற முடியும். மேலும் இந்த சலுகை மார்ச் 31, 2025 வரை நீடிக்கும்

ஏற்கனவே ஆக்டிவ் பிளானை கொண்டுள்ள ப்ரீபெய்ட் பயனர்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவிற்கான ரூ.100 ஆட்-ஆன் பேக்கை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி-க்கான அணுகலை பெறலாம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. ஜியோவின் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் சமீபத்தில் தான் அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Airtel Launched New Mobile DTH Plan For Rs 448 in Assam All You Need To Know
Read Entire Article