ARTICLE AD BOX
இந்திய மார்கெட் மிரளுது.. ரூ.14,999-க்கு 6000mAh பேட்டரி.. IP69 வாட்டர் ரேட்டிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படி ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் மட்டுமல்லாமல், IP69 டாப்-டயர் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) போன் களமிறங்கி இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான ஜிடி மோட், 90 ஃஎப்பிஎஸ், ஏஐ மோஷன் கன்ட்ரோல் பீச்சர்களையும் இந்த போன் கொடுக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 எஸ்ஓசி (Octa Core Snapdragon 6 Gen 4 SoC) சிப்செட் கொண்ட முதல் மாடலாக இந்த ரியல்மி பி3 5ஜி போன் வெளியாகி இருக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஏஐ கேமிங் பீச்சர்களை கொடுக்கிறது. மார்ச் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.2000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட இருக்கிறது.

ரியல்மி பி3 5ஜி அம்சங்கள் (Realme P3 5G Specifications): இந்த ரியல்மி போனில் பட்ஜெட்டைவிட கூடுதலாக அவுட்புட் கொடுக்கும்படி 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
கேமிங் மாடலாக இருப்பதால், 1500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 90 ஃஎப்பிஎஸ் அல்ட்ரா-ஸ்மூத் பிஜிஎம்ஐ, ஜிடி பூஸ்ட் (GT Boost), ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் (AI Ultra Touch Control) மற்றும் ஏஐ மோஷன் கன்ட்ரோல் (AI Motion Control) சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 எஸ்ஓசியுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் லேட்டஸ்ட் அப்கிரேட்களுடன் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் களமிறங்க இருக்கின்றன. இதுபோக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.
10 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) இருக்கிறது. ஆகவே, 18 ஜிபி ரேம் மூலம் லாக்-ப்ரீ அவுட்புட் பெற்று கொள்ளலாம். கேமிங் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பட்டையை கிளப்பும் பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ஏரோ ஸ்பேஸ் கூலிங் சிஸ்டம் (Aerospace Cooling System) சப்போர்ட் உள்ளது.
இந்த ரியல்மி பி3 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. பிரீமியம் டிசைனில் 7.97 எம்எம் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 அறிமுக சலுகை போக ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. மார்ச் 19ஆம் தேதி முதல் கிடைக்க இருக்கிறது. ஸ்பேஸ் சில்வர், காமெட் கிரே, நெபுளா பிங்க் கலர்கள் உள்ளன.