சென்னையில் இரவில் நடந்த படுபயங்கர சம்பவம்.. 2 ரவுடிகள் துள்ளத் துடிக்க வெட்டிக்கொலை!

8 hours ago
ARTICLE AD BOX

சென்னையில் இரவில் நடந்த படுபயங்கர சம்பவம்.. 2 ரவுடிகள் துள்ளத் துடிக்க வெட்டிக்கொலை!

Chennai
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் 2 ரவுடிகள் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் ஆகியோர் மது போதையில் படுத்து இருந்தபோது, ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் (25) மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் நண்பர்களோடு சேர்ந்து மது குடித்துள்ளனர். இதனையடுத்து கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்து தூங்கியுள்ளனர்.

Chennai crime murder

இரவு 10 மணியளவில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மது போதையில் படுத்திருந்த அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளது. மது போதையில் இருந்ததால் அவர்கள் தப்பிக்க முடியாமல் அலறி துடித்துள்ளனர்.

இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருண் உடல் முழுவதும் வெட்டு காயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலியை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பழிக்கு பழி வாங்க சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டு இருந்த நிலையில் இதனை அறிந்த சுக்கு காபி சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் அருண் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனை கொலை செய்யத் திட்டமிட்டு நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது அருண் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பரான படப்பை சுரேஷை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக உள்ள கோட்டூர்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு காபி சுரேச்ஜ் உட்பட எட்டு நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து கோட்டூர்புரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோட்டூர்புரத்தில் நேற்று இரவு நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் சென்னை நகர் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
English summary
The shocking incident of two rowdies being hacked to death in Kotturpuram, Chennai, last night has left a mark. A criminal named Arun and his friend Padappai Suresh were lying in a drunken state when a gang hacked them to death.
Read Entire Article