சென்னையில் 6 புதிய மண்டலங்கள்! பெயர்ப் பட்டியல் வெளியிட்டது தமிழக அரசு!

2 hours ago
ARTICLE AD BOX

மக்கள்தொகை பெருக்கம் மற்றும் அதிகரித்து வரும் நகர்மயமாக்கல் பணிகள் காரணமாக சென்னை மாநகரில் உள்ள மண்டலங்கள் அதிகாிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதிதாக 6 மண்டலங்களின் பெயரை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் புதிய மண்டலங்களின் பெயர்ப் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் 15 மண்டலங்களைக் கொண்டிருந்த சென்னை இப்போது 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம்- திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி-சோழிங்கநல்லூர் ஆகியவை 6 புதிய மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த மணலி மண்டலம் மட்டும் அருகில் திருவொற்றியூர் மற்றும் மாதவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Corporation of Chennai

இதன்படி புதிதாகச் சேர்க்கப்பட்ட ஆறு மண்டலங்கள் உள்பட இருபது மண்டலங்கள் சென்னையில் இருக்கும். சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் இப்போது புதிய மண்டலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 20 மண்டலங்கள் விவரம்:

திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம்- திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி-சோழிங்கநல்லூர்.

Read Entire Article