சென்னை மாநகராட்சி வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

9 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

சென்னை மாநகராட்சி வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

News

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கான 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சென்னை மாநகராட்சியின் மொத்த மதிப்பீடு வரவாக 8,267 கோடி ரூபாய் , மொத்த செலவாக 8,404 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வருவாயை விட செலவினம் அதிகமாக இருக்கிறது. மாநகராட்சிக்கான செலவினை பொருத்தவரை 42. 8 சதவீத பணம் ஊழியர்களுக்கான சம்பளத்திற்கு சென்று விடுகிறது , 35.76 சதவீதம் இயக்க மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக சென்று விடுகிறது, நிர்வாக செலவுகளுக்காக 5.7 சதவீதமும் மற்ற செலவினங்களுக்காக 9.64 சதவீதமும் சென்றுவிடுகிறது. வட்டி மற்றும் நிதி கட்டணமாக 1.3 சதவீதம் தொகையானது செலவு செய்யப்படுகிறது.

சென்னை  மாநகராட்சி வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

சென்னை மாநகராட்சியை நாட்டின் மற்ற நகராட்சிகளுடன் ஒப்பிட்டால் பெங்களூரு மாநகராட்சியின் பட்ஜெட் மதிப்பீடு சுமார் 16000 கோடி, மும்பை மாநகராட்சி பட்ஜெட் மதிப்பீடு 74, 427 கோடி ரூபாய், ஐதராபாத் மாநகராட்சிக்கான பட்ஜெட் மதிப்பு 8,440 கோடி ரூபாய். இவற்றுடன் ஒப்பிட்டால் சென்னை நகராட்சி பட்ஜெட் குறைவானது தான். அதிலும் சென்னை மாநகராட்சி செலவில் 80 சதவீத தொகை ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு செலவுகள், நிர்வாக செலவுகள் ஆகியவற்றிற்காக சென்று விடுகிறது.

இதனால் வருமானத்தை பெருக்க தேவையான பணிகளுக்கு செலவிடுவதற்கு மாநகராட்சியிடம் பணம் இருப்பதில்லை. சென்னை மாநகராட்சி நிர்வாகம் சரியாக திட்டமிட்டாலே நல்ல வருமானம் ஈட்ட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சென்னை மாநகராட்சி நிர்வாகம் வாகன நிறுத்தங்கள் நிறுத்தங்களை முறைப்படுத்தி சரியாக வாடகை வசூலித்தால் பல ஆயிரம் கோடிகளை வருமானமாக ஈட்ட முடியும். அடுத்ததாக பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் இடங்களை முறையாக விளம்பரங்களுக்கான பகுதிகளாக பயன்படுத்தும் போது சென்னை மாநகராட்சியால் ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

விளம்பர இடங்களை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது ,வரியை முறையாக வசூல் செய்யாமல் இருப்பது , கட்டிட விதிமீறல் அபராதங்களை வசூல் செய்யாமல் இருப்பது, வாகன நிறுத்தும் இடங்களை முறையாக பராமரித்து பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவை காரணமாக மட்டும் பல ஆயிரம் கோடி வருமானத்தை மாநகராட்சி இழக்கிறது.

Take a Poll

கர்நாடகாவைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் வரி பகிர்வாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 40 சதவீத தொகையை வழங்குகிறது கேரளா 24 சதவீத தொகை வழங்குகிறது ஆனால் தமிழ்நாடு 10 சதவீத தொகை மட்டுமே வழங்குகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளால் மேம்பாடு திட்டங்களில் கவனம் செலுத்த முடியாமல் போவதாக சொல்லப்படுகிறது.

அதைப்போல புரோபஷனல் டேக்ஸ் தற்போது ஆண்டுக்கு அனைவருக்கும் 2500 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது. சாதாரண வேலையில் இருப்பவர்கள் தொடங்கி அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் வரை அனைவருக்கும் ஒரே அளவில் இருப்பது தான் பிரச்சனை. இதனை மாற்றி அமைத்தால் இன்னும் கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே சென்னை மாநகராட்சி வருமானத்தை பெருக்கும் வழிகளை முறையாக பயன்படுத்தினாலே பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட முடியும்.

Read Entire Article