சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை.. மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உடனே விண்ணப்பிங்க

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை.. மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உடனே விண்ணப்பிங்க

Jobs
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை தேர்வு முறை குறித்தும் இங்கே பார்க்கலாம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என்பது தமிழக அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் வாயிலாகவே இயக்கப்படுகின்றன. சென்னை எம்.டி.சியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பொது போக்குவரத்தில் உயிர் நாடிகளில் ஒன்றாக அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளும் உள்ளன.

Job Jobs Employment

இந்த பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான நடத்துநர்கள், டிரைவர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். மாநகர போக்குவரத்து கழகத்தில் அவ்வப்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் தற்போது, அப்ரெண்டீஸ் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மநகராட்சி கழகத்திற்கு சொந்தமான டெப்போக்க்கள் உள்ளன. இந்த டெப்போக்களில் இந்த அப்ரெண்டீஸ் பணியாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

அங்கன்வாடியில் வேலை..தமிழகம் முழுக்க 7,783 பணியிடங்கள்..10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
அங்கன்வாடியில் வேலை..தமிழகம் முழுக்க 7,783 பணியிடங்கள்..10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

பணியிடங்கள் விவரம்:

மெக்கானிக் மோட்டார் வாகனம் - 120
மெக்கானிக் - 60
டீசல் - 3
ஆட்டோ எலக்ட்ரிஷியன் - 35
வெல்டர் - 19
ஃபிட்டர் - 40
டர்னர் - 01
பெயிண்டர் - 22 என மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் வேலை! 642 பணியிடங்கள்.. ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம்! சூப்பர் வாய்ப்பு
ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் வேலை! 642 பணியிடங்கள்.. ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம்! சூப்பர் வாய்ப்பு

ஊதியம் எவ்வளவு?

ஐடிஐ பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஓராண்டுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெற, குரோம்பேட்டையிலுள்ள சென்னை மாநகா் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில், 02.04.2025 காலை 10 மணியளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் அக்கவுண்டிற்கே வரும் ரூ.600! வேலை இல்லாத இளைஞர்கள் அப்ளை பண்ணலாம்! தூத்துக்குடி ஆட்சியர்
மாதந்தோறும் அக்கவுண்டிற்கே வரும் ரூ.600! வேலை இல்லாத இளைஞர்கள் அப்ளை பண்ணலாம்! தூத்துக்குடி ஆட்சியர்
More From
Prev
Next
English summary
Chennai Metropolitan Transport Corporation has announced the recruitment of apprentices. There are a total of 300 vacancies. Details about these posts and the selection process can be found here.
Read Entire Article