Reel Shoot Sparks Panic In Karnataka (Photo Credit: @ndtv X)

மார்ச் 19, கலபுரகி (Karnataka News): இன்றைய இளம் தலைமுறையினரிடையே ரீல்ஸ் மோகம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல விவரீத செயல்களில் ஈடுபட்டு தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில், ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல் ரீல்ஸ் வீடியோ (Reels Video) எடுத்து 2 பேர் பொதுமக்களை அலறவிட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. PM Narendra Modi: வரலாறு படைத்த இளையராஜா; பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு, பெருமிதம்.!

ரீல்ஸ் மோகம்:

கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டத்தில் உள்ள பரபரப்பான ஹம்னபத் சாலையில், ஒருவர் மற்றொருவரை நடுரோட்டில் ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல ஒரு சம்பவம் நடந்தது. சாலையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஒருவர் படுத்திருக்க, அவரின் மீது ஏறி உட்கார்ந்த மற்றொருவர் முகம் முழுவதும் ரத்தத்தை பூசியவாறு 2 கைகளையும் விரித்து கத்துவது போல செய்திருக்கிறார். இதனைப் பார்த்த மக்கள் பீதி அடைந்து ஓட ஆரம்பித்தனர்.

இருவர் கைது:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அங்கிருந்த 2 பேரிடம் விசாரிக்க, அவர்கள் இருவரும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தது தெரியவந்தது. உடனடியாக, அவர்களை இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் சாய்பன்னா, சச்சின் என்பது தெரியவந்தது. இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.