ARTICLE AD BOX

வங்கிக்கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் ஏதாவது ஒரு காரணத்தினால் செயல்படாமல் இருந்தால் அந்த வங்கி கணக்கு அல்லது இணைக்கப்பட்டிருக்கும் Gpay, Phonepay போன்ற UPI ஐடிகள் முடக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையானது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது இந்த விதிமுறையில் ஒருவர் வங்கி கணக்கு ஆரம்பிக்கும் பொழுது வங்கி கணக்கோடு இணைத்த செல்போன் எண்ணை தற்போது பயன்படுத்தாமல் இருந்தால் அந்த வங்கி கணக்கை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. இதனை தவிர்க்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அதாவது அனைவரும் தங்களுடைய வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் என்ன? என்பதை உறுதி செய்து அதை பழையதாக இருந்தால் உடனடியாக வங்கிக்கு சென்று தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணை கொடுத்து விட்டால் போதும்.
ஒருவர் தான் எத்தனை வங்கி கணக்கு வைத்திருந்தாலும் அதோடு என்னென்ன எண் இணைக்கப்பட்டிருக்கிறது? அது பயன்பாட்டில் இருக்கிறதா? என்று தெரிந்து கொண்டு அவ்வாறு ஏதேனும் பழைய இணைக்கப்பட்டிருந்தால் வங்கி கணக்கு பயன்படுத்தி கொண்டிருந்தால் அதை உடனடியாக வங்கிகிக்கு சென்று மாற்றலாம். இந்த புதிய விதிமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைவுக்கு வருவதால் இதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வங்கி கணக்கு அல்லது செல்போன் எண்ணோடு தொடர்பில் உள்ள ஜிபே, போன்பே போன்றவை நீக்கப்படலாம்.