முதலீடு என்னவோ ரூ. 1 லட்சம் தான்.. ஆனால் வருமானம் ரூ.2 கோடி! லட்டு விற்று லாபம் பார்க்கும் ஜோடி!

3 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

முதலீடு என்னவோ ரூ. 1 லட்சம் தான்.. ஆனால் வருமானம் ரூ.2 கோடி! லட்டு விற்று லாபம் பார்க்கும் ஜோடி!

News

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. குறிப்பாக உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறோம். அப்படி இனிப்பு பிரியர்களுக்கு ஆரோக்கியமான இனிப்புகளை வழங்குவதற்காக உருவெடுத்த ஒரு பிராண்டு தான் லட்டுபாக்ஸ். ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட இந்த பிராண்ட் வொய்ட் சுகர் மற்றும் செயற்கை பதப்படுத்துகளை பயன்படுத்தாமல் இனிப்புகளை வழங்கி வருகிறது.

அது மட்டுமின்றி இந்த பிராண்டை தொடங்கிய நிறுவனர்கள் தற்போது கோடிகளில் லாபம் பெற்று வருகின்றனர். இந்த பதிவில் லட்டுபாக்ஸ் நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது? இதன் நிறுவனர்கள் யார்? தற்போது எவ்வளவு லாபம் கிடைக்கிறது? இவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்? என்ற விவரங்கள் அனைத்தையும் பார்ப்போம்.

முதலீடு என்னவோ ரூ. 1 லட்சம் தான்.. ஆனால் வருமானம் ரூ.2 கோடி! லட்டு விற்று லாபம் பார்க்கும் ஜோடி!

சில தொழில் முனைவோர் பயணங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். ஏனெனில் ஆரம்பிக்கும் போது அனைவரும் அதற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.. சில தடைகளும் இருக்கும். வேலையை விட்டு ஆரம்பிக்க வேண்டுமா என ஆரம்பிக்கும் நபர்களுக்கே சந்தேகங்கள் எழும். ஒரு சிலர் எழும் தடைகளில் எல்லாம் பாதிக்கப்பட்டு எடுக்கும் முயற்சியை பாதையில் விட்டுவிடுவர். ஆனால் சிலர் எப்பாடுபட்டாவது எடுக்கும் முயற்சியை கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பர்.

இப்படி பல விஷயம் இருக்கையில் இதையெல்லாம் மீறி ஒரு தொழிலை செய்து அதில் வெற்றி அடைவதில் தான் முழு மகிழ்ச்சியே இருக்கிறது. அப்படித்தான் ஒரு ஜோடி தற்போது சாதித்துக் காட்டியுள்ளது.

2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் லட்டுபாக்ஸ். ஹைதராபாத்தைச் சேர்ந்த இனிப்பு தயாரிப்பு பிராண்டான லட்டுபாக்ஸை நன்கு அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோரான சன்தீப் ஜோகிபார்டி மற்றும் கவிதா கோபு ஆகியோர் தொடங்கியுள்ளனர்.

நீண்ட நாட்களாக டாக்டர்கள் பல உடல்நல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகரை குறைத்துக் கொள்ளும்படி பரிந்துரைத்து வருகின்றனர். இதையே ஒரு வணிகமாக மாற்றலாம் என முடிவு செய்த இந்த ஜோடி செயற்கையாக பதப்படுத்த பயன்படுத்தப்படும் பொருட்கள் எதுவும் இல்லாமலும்.. அதே நேரம் சர்க்கரை இல்லாமலும் இனிப்பு தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

Also Read
 36 லட்சம் ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! தகவல் சொன்ன நிர்மலா சீதாராமன்!
8-வது ஊதிய குழு: 36 லட்சம் ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! தகவல் சொன்ன நிர்மலா சீதாராமன்!

இன்றெல்லாம் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் தாங்களாக முன்வந்து ஒரு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்காக சிலர் மாலை நேரங்களை பயன்படுத்துகின்றனர். அப்படித்தான் சன்தீப் ஹைதராபாத்திற்கு திரும்பி தனது தொழில் முனைவோர் ஆர்வத்தை தன் மனைவியிடம் பகிர்ந்துள்ளார். சந்திப் மற்றும் அவருடைய மனைவி கவிதா இணைந்து இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இருவருமே இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள்.

கார்ப்பரேட் உலகில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த பிறகு இந்த புதிய பயணத்தை தொடங்க இருவரும் முடிவு செய்தனர். அதற்காக 2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். இந்தியா வந்த பிறகு பழைய விஷயங்களை நினைவு கூறும் வகையில் 6 முதல் 8 மாதங்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்வதற்காகவே நேரத்தை செலவிட்டார்.

அப்போது உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்தினார். சந்தீப்புக்கு இனிப்புகள் மீது மிகுந்த விருப்பம். ஆனால் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான இனிப்புகளில் எனர்ஜி மற்றும் புரதங்களை வழங்குவதற்காக சில பொருட்கள் கலக்கப்பட்டு இருந்தது. இது சந்தீப்புக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆரோக்கியமான இனிப்புகளை அதற்கு மாற்றாக உருவாக்க விரும்பினார். அப்போதுதான் அவருக்கு தான் ஒரு பிராண்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதன் விளைவாக 2020-ஆம் ஆண்டு ரூ.1 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது தான் லட்டுபாக்ஸ் நிறுவனம்.

Also Read
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் கைரேகையை பதிவு செஞ்சிட்டீங்களா? இல்லன்னா சிக்கல்!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் கைரேகையை பதிவு செஞ்சிட்டீங்களா? இல்லன்னா சிக்கல்!

சிறு வணிகத்தை தொடங்கினால் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது சற்று கடினமான ஒன்று. பிறரை விட தங்கள் நிறுவனத்தில் என்ன தனித்துவமாக உள்ளது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த ஜோடிக்கு நீண்ட நாட்கள் ஆனது. இதனால் ஆரம்பத்தில் தங்களுடைய இனிப்புகளை கண்காட்சிகள் மற்றும் ஐடி நிறுவனங்களில் ஸ்டால் அமைத்து விற்பனை செய்ய தொடங்கினர்.

மே மாதம் 2020-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக லட்டு பாக்ஸ் நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது கோவிட் 19 தொற்று ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆரோக்கியமான உணவு பொருள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்கத் தொடங்கியதால் லட்டுபாக்ஸ் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. இந்த பிராண்ட் தனக்கென வாடிக்கையாளர் தளத்தையே உருவாக்கியது.

முதன்முதலாக லட்டுபாக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டபோது வெறும் நான்கு வகையான இனிப்புகள் மட்டுமே தயாரிக்க தொடங்கினர். ஆனால் தற்போது 15-க்கும் அதிகமான லட்டுக்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக நாடு தழுவிய வாடிக்கையாளர்கள் லட்டுபாக்ஸ் நிறுவனத்திற்கு உள்ளனர்.

வித விதமான லட்டுக்களை ஆரோக்கியமான முறையில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். ஹைதராபாத்தில் ஒரு ஸ்டோரும் உள்ளது. லட்டு பாக்ஸ் நிறுவனத்தில் சர்க்கரை, செயற்கை பதப்படுத்திகள், செயற்கை வண்ணங்கள், சுவைகள் எதுவும் இல்லாமல் செயல்படும் இந்நிறுவனம் 2023-ஆம் நிதியாண்டில் ரூ.2 கோடி வருடாந்திர வருவாய் ஈட்டியது. இந்நிலையில் 2205-ஆம் ஆண்டுக்குள் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி முழுவதும் 100 கடைகளை திறக்க இலக்கு வைத்துள்ளது.

பலருடைய தொழில் முனைவோர் பயணத்தை எடுத்துக் கொண்டால்.. அவர்களுடைய முதலீடு, ஆரம்பிக்கும் இடம், தயார் செய்யும் பொருட்கள் என அனைத்துமே சிறிய அளவில் தான் இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட தூரம் வளர்ச்சி அடைந்த பிறகு.. பிறருடைய தொழில் முனைவோர் பயணங்களை பற்றி படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

அப்படி தான் இன்னும் எதிர்கால தொழில் முனைவோர்கள் ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? ஆரம்பித்தால் கை கொடுக்குமா? கொடுக்காதா? என யோசித்துக் கொண்டே இருக்கின்றனர். அப்படி இருக்கையில் ரிஸ்க் எடுத்து பிசினஸ் தொடங்கி இன்று வெற்றி கண்டிருக்கும் இந்த ஜோடி பல எதிர்கால தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Read Entire Article