'உட்கார்ந்துட்டு என்னை மிரட்ட கூடாது' அதிமுக எம்எல்ஏ-வால் டென்ஷனான அப்பாவு.. என்ன நடந்தது?

3 hours ago
ARTICLE AD BOX

'உட்கார்ந்துட்டு என்னை மிரட்ட கூடாது' அதிமுக எம்எல்ஏ-வால் டென்ஷனான அப்பாவு.. என்ன நடந்தது?

Chennai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி பதில் நேரத்தின் போது, அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் சபாநாயகர் அப்பாவு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கேள்வி கேட்க அனுமதிக்காததால் அம்மன் அர்ஜுனன் முறையிட்ட போது, சபாநாயகர் அப்பாவு உட்கார்ந்துட்டு என்னை மிரட்டக் கூடாது என்று காட்டமாக பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனால் விவாதத்திற்கு தொடர்பான அதிமுக எம்எல்ஏ-க்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது.

tamilnadu assembly appavu aiadmk

அப்போது அதிமுக எம்எல்ஏ அருள்மொழி தேவனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் அருகில் இருந்த அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் அமர்ந்திருந்தவாறு குரல்களை உயர்த்தி சபாநாயகர் அப்பாவுவிடம் பேச அனுமதிக்குமாறு கூறினார். இதனால் சபாநாயகர் அப்பாவு டென்ஷனாகினார். இதனால் சில நிமிடங்கள் சட்டப்பேரவை பரபரப்பாகியது.

அப்போது சபாநாயர்க் அப்பாவு பேசுகையில், நீங்கள் ஒருவர் மட்டும் அதிமுகவில் இல்லை. 66 பேர் இருக்கிறீர்கள். 2 நாட்களில் 66 பேருக்கு துணைக் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்க முடியாது. நீங்கள் உட்கார்ந்துகிட்டு என்னை மிரட்டக் கூடாது.. கேள்விக்கு தொடர்புடையவையாக இருந்தால் மட்டுமே பேச வாய்ப்பு அளிப்பேன். மிரட்டலாம் கொடுக்க கூடாது.

ஆளுங்கட்சிக்கு ஒன்று, எதிர்க்கட்சிக்கு ஒன்று என்றே பேச வாய்ப்பு அளித்து வருகிறோம். உங்கள் எம்எல்ஏ தான் இப்போதும் பேசுகிறார். கேள்வி கேட்காத ஆட்களுக்கு பார்த்து பார்த்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் பார்த்து கொள்ளுங்கள்.. வந்தவர்களில் அக்னி கிருஷ்ணமூர்த்தி மட்டுமே 2 முறை கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைவருக்கும் ஒருமுறை மட்டுமே கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்படவில்லை. உங்கள் கட்சி உறுப்பினர் இப்படியே பேசினால், பின் நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி பதில் விவாதத்தில் ஜனநாயக முறைப்படியே சபை நடத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சிக்கு ஒரு கேள்வி கேட்க வாய்ப்பு அளித்தால், அடுத்த கேள்வி எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
English summary
Speaker Appavu got angry on AIADMK MLA Amman Arjunan in the Tamilnadu Assembly
Read Entire Article