சென்னை சிட்டிக்கு உள்ளேயே.. வளரும் புதிய சிட்டி.. ஸ்டாலினின் "கனவு ப்ராஜெக்ட்".. எவ்வளவு வேகம்!

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை சிட்டிக்கு உள்ளேயே.. வளரும் புதிய சிட்டி.. ஸ்டாலினின் "கனவு ப்ராஜெக்ட்".. எவ்வளவு வேகம்!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 151.55 கோடி செலவில், வரவிருக்கும் ஃபின்டெக் சிட்டிக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல் கட்டமாக ஃபின்டெக் டவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

10 மாடிகளைக் கொண்ட ஃபின்டெக் டவரைக் கட்டுவதற்கான பணிகள் வேகமாக நடந்து முடியும் தருவாயில் உள்ளன. இதே பகுதியில் இன்னும் 4-5 டவர்கள் வர உள்ளன. பேக்மேன் தொடங்கி ஆக்சிஸ் வரை உலகின் முக்கியமான் வங்கிகள், பொருளாதார நிறுவனங்கள் இங்கே வர உள்ளன.

chennai fintech

ஃபின்டெக் சிட்டி

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் குவிந்து வருகின்றன. ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இ நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடர் முதலீடுகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஃபின்டெக் சிட்டி அமைத்து மேலும் முதலீடுகளை திரட்ட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி 116 கோடியில் ஃபிண்டெக் சிட்டி மற்றும் 254 கோடி மதிப்பில் நந்தம்பாக்கத்தில் உள்ள ஃபின்டெக் டவர் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான மேம்பாட்டுப் பணிகளுக்கு சில மாதங்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட ஃபின்டெக் நகரம் 12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மற்றும் 80,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட Fintech நகரில் அமைய உள்ள சர்வதேச மற்றும் தேசிய BFSI (வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு) நிறுவனங்களுக்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க நந்தம்பாக்கத்தில் மொத்தம் 56 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்

சென்னை நந்தம்பாக்கத்தில் வரவிருக்கும் ஃபின்டெக் சிட்டியில் 'டிஸ்ட்ரிக்ட் குளிரூட்டும் அமைப்பு' இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வை 20% குறைக்கும் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளது. கட்டிடங்கள் வழியாக செல்லும் குழாய்களின் வலையமைப்பைக் கொண்டிருக்கும் வகையில் இந்த 'டிஸ்ட்ரிக்ட் குளிரூட்டும் அமைப்பு' கொண்டு வரப்படும்.

குளிரூட்டும் ஆலைகளில் இருந்து குளிரூட்டப்பட்ட நீர், இடத்தை குளிர்விக்கும் குழாய்கள் வழியாக சென்று மீண்டும் குளிர்விக்க ஆலைக்கு திரும்பும் வகையில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் எல்லாமே மாறும்

அனைத்து டிஜிட்டல் நிதிச் சேவைகளும் ஏழை, எளியோரை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பிரம்மாண்ட Fintech சிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. ஐடி துறைக்கு இணையாக Fintech துறை அதிக முதலீடுகளை பெறும் என்பதால் சென்னையில் அமைய உள்ள Fintech சிட்டி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. ஐடி, ஐடிஇஎஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இணையாக இது பெரிய வளர்ச்சியை கொடுக்க உள்ளது.

அதிலும் இது வெறும் முதல் கட்ட திட்டம்தான். இரண்டாம் கட்டத்தில் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சென்னையில் 151.55 கோடி செலவில், வரவிருக்கும் ஃபின்டெக் சிட்டியில் 10 மாடிகளைக் கொண்ட ஃபின்டெக் டவரைக் கட்டுவதற்கான ஏலத்தில் ஈரோட்டை சேர்ந்த யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் வெற்றி பெற்று தற்போது கட்டுமானத்தை வேகமாக மேற்கொண்டு வருகிறது.

More From
Prev
Next
English summary
Fintech City in Chennai’s Nandambakkam is coming faster than people expected
Read Entire Article