சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை

4 days ago
ARTICLE AD BOX

சென்னை-திருச்சி-மதுரை; ரூ.26,500 கோடி கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை- திருச்சி- மதுரை இடைய பசுமைவழி எக்ஸ்பிரஸ் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை DPR தயாரிக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.26,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களை மட்டும் அல்லாமல் 3 முக்கிய தொழில் நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பிராந்திய வளர்ச்சிக்கு முக்கியமான ஊக்குவிப்பாக அமையும்,  இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பயண நேரத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் ஏற்கனவே நடைபெற்று வரும் சென்னை – பெங்களூர் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இருக்கும் எனக் தெரிவிக்கபடுகிறது.

விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க திட்டம்

தேசிய நெடுஞ்சாலை துறை இந்த திட்டத்திற்கான DPR தயாரிப்பை தீவிரமாக முன்னெடுத்து, விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ்வே, நவீன உள்கட்டமைப்புகள் உடன், பல வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 8 வழி சாலைகள், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் பிற சாலை சேவைகளும் அடங்கும். இந்த திட்டம் நிறைவேறும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்து மற்றும் வணிகம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை வரையில் 8 வழிச் சாலையாக நீட்டிக்கப்பட உள்ளது!

முதலில் திட்டம் சென்னை - திருச்சி வரையில் தான் திட்டமிடப்பட்டது, ஆனால் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. சென்னை-திருச்சி இடையே 310 கி.மீ நீளமுள்ள எக்ஸ்பிரஸ்வேயை கட்டமைத்து, தற்போது 6 மணி நேரத்தில் பயணிக்கும் தூரத்தை விரைவில் 4 மணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாகு மதுரை வரையில் 8 வழிச் சாலையாக நீட்டிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை- மதுரை நெடுஞ்சாலை, மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வேயான சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ்வே போலவே, கிரீன்ஃபீல்ட் திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எட்டு வழி சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்வே திட்டம், தற்போது பல்வேறு வழக்குகள் மற்றும் ஒப்புதல்கள் தொடர்பான பிரச்சனைகளால் தடைப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் 277.3 கி.மீ நீளமுள்ள இந்த 8 வழி சாலை திட்டம், சென்னைக்கும் சேலத்திற்கும் இடையேயான பயண நேரத்தை தற்போதைய 5 முதல் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 2.5 மணி நேரமாக குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ்வே திட்டம் - சி.வி. சண்முகம் முன்னெடுப்பு

சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ்வே திட்டம் குறித்து அதிமுக எம்பி  சி.வி. சண்முகம் திட்டத்தின் நிலை குறித்து கேட்டதற்கு மத்திய தொழிற்சாலை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி சில வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) அமைச்சகம் தயாரித்த போதிலும், வழக்குகள் மற்றும் பல்வேறு ஒப்புதல்களுக்குத் தேவையான தாமதங்களால் இத்திட்டம் முன்னேற முடியாமல் உள்ளது என்று கட்கரி தெரிவித்தார். தற்போது 2வது திட்டத்திற்கான DPR அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

ALSO READ | சென்னை To பெங்களூர்... வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம்.. புல்லட் ரயிலில் எவ்வளவு சீக்கிரம் போகலாம்?

Read Entire Article