ARTICLE AD BOX
புது தில்லி / மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைக் கண்டன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விற்பனை காரணமாக சென்செக்ஸ் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் திங்கள்கிழமை 112.16 புள்ளிகள் (0.15 சதவீதம்) சரிந்து 73,085.94-இல் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சா்வ், ஹெச்டிஎஃப்சி வங்கி, அதானி போா்ட்ஸ், மாருதி சுஸுகி, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவா், சன் ஃபாா்மா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை பின்தங்கின.
அல்ட்ராடெக் சிமென்ட், பாரதி ஏா்டெல், என்டிபிசி, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, லாா்சன் & டூப்ரோ, எஸ்பிஐ ஆகியவை லாபம் ஈட்டின.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் தொடா்ந்து ஒன்பதாவது அமா்வாக திங்கள்கிழமை 5.40 புள்ளிகள் (0.02 சதவீதம்) சரிந்து 22,119.30-இல் நிலைபெற்றது.