ARTICLE AD BOX
Elon Musk-ஏ ஷாக் ஆகிட்டார்..! டெஸ்லா காரில் இப்படியொரு விஷயத்தை செய்ய முடியுமா..?!
ஆட்டோமொபைல் துறையில் தொழில்நுட்ப உச்சத்தை தொட்ட டெஸ்லா-வின் Full Self-Driving (FSD) தொழில்நுட்பம் இதுநாள் வரையில் சரியாக கட்டமைப்பட்ட சாலையில் தான் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் முதல் முறையாக சாமானிய மக்கள் பயன்படுத்தும் ஒரு கார் சரியாக கட்டமைக்கப்பட்டாத மண் பாதையில் பயன்படுத்து பலரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்துள்ளது.
சீனாவில் மிகவும் சவாலான மலைப்பாதைகளில் சோதிக்கப்பட்டு, டெஸ்லா காரின் உண்மையான திறனை உலகிற்கு ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார், தற்போது டிவிட்டரில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், டெஸ்லா மாடல் Y வாகனம், FSD பீட்டா மென்பொருளைப் பயன்படுத்தி, திருப்பங்கள், சரிவுகள் மற்றும் குறுகிய பாதைகள் நிறைந்த மலைப்பாதையில் திறம்பட செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சோதனை ஓட்டம், டெஸ்லாவின் தன்னியக்க ஓட்டுநர் தொழில்நுட்பத்தின் திறனைஎடுத்துக்காட்டுகிறது.
சவாலான சூழலில் FSD: சீனாவின் மலைப்பாதைகளில் FSD பீட்டா மென்பொருள், வாகனத்தை பாதுகாப்பாகவும் திறமையாகவும் செலுத்தியது. வீடியோவில், வாகனம் வளைவுகளில் தானாகவே வேகத்தைக் குறைப்பது, எதிரே வரும் தடைகளுக்கு ஏற்ப வாகனத்தை இயக்குவது என பல வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
FSD பீட்டா: FSD பீட்டா என்பது டெஸ்லாவின் மேம்பட்ட தன்னியக்க ஓட்டுநர் அமைப்பு ஆகும். இது, வாகனத்தின் கேமராக்கள், ரேடார்கள் மற்றும் சென்சார்கள் மூலம் சுற்றுசூழலைப் புரிந்துகொண்டு, ஓட்டுநரின் தலையீடு இல்லாமல் வாகனத்தை இயக்கும் திறன் கொண்டது.
சீனாவில் டெஸ்லா: சீனா, டெஸ்லா நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாகும். FSD தொழில்நுட்பத்தை சீனாவின் சாலைகளில் சோதிப்பது டெஸ்லா-வின் வர்த்தகத்தை மேம்படுத்தும் முக்கிய படியாகும்.