ARTICLE AD BOX
சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, சமையல் தொழில் நிபுணர்களிடமிருந்து சிறந்த வழிகாட்டுதல்களை பெற்று பயனடைந்தனர். ஆர்.கே.ஜி அக்மார்க் நெய் மற்றும் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் (SICA) இணைந்து ‘ஸ்டெப்பிங்ஸ்டோன்’ என்ற கல்லூரி மாணவர்களுக்கன வழிகாட்டுதல் நிகழ்வை நடத்தின. இந்த நிகழ்வானது, சமையற்கலை கல்வி குறித்தும் அதில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மாணவர்களிடம் எதிர்ப்பார்க்கும் திறன்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், அடுத்தத் தலைமுறை சமையற்கலை வல்லுநர்களுக்கு தேவையான திறன்கள், தொழில் நுண்ணறிவுகள் மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்தும் இந்நிகழ்வில் உரையாடப்பட்டன.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1500 இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் துறைசார்ந்து பல்வேறு தலைப்புகளில் கீழ் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொண்டனர்.
அவற்றில் சில:
- சமையல் தொழிற்துறையில் வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குதல்
- சமையல் தொழிற்துறையில் வளர்ச்சி வாய்ப்புகளை கண்டறிதல்
- தனிப்பட்ட மற்றும் தொழில்முறையில் நிதி மேலாண்மை
- தொழில்சார்ந்து திறமையான பேச்சுத்திறமைகளை வளர்த்துகொள்ளுதல்
தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைத்து நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களான,
சென்னை: இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம், தரமணியில் நடைபெற்றது. இங்கு 17 கல்லூரிகளில் இருந்து 210+ மாணவர்கள் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர்: ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் நடைபெற்றது. இங்கு 17 கல்லூரிகளில் இருந்து 265+ மாணவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி: SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் நடைபெற்றது. இங்கு 30 கல்லூரிகளில் இருந்து 715+ மாணவர்கள் பங்கேற்றனர்.
மதுரை: சுப்புலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆஃப் சயின்ஸில் நடைபெற்றது. இங்கு 24 கல்லூரிகளில் இருந்து 290+ மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுகள் குறித்து ஆர்.கே.ஜி நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் ஜி. அரவிந்த் கூறியதாவது, "‘ஸ்டெப்பிங்ஸ்டோன்’ என்பது அடுத்த தலைமுறை சமையல் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகவும், தொழில் நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுடன் நெட்வொர்க்கிங் செய்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான அறிவு மற்றும் அனுபவத்தை வழங்கும் வாய்ப்பாக இருந்தது", என்றார்.
SICA அமைப்பின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர். சேஃப் தாமு கூறியதாவது, "‘ஸ்டெப்பிங்ஸ்டோன்’ நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன். இந்த முயற்சி, சமையல் தொழில்துறையில் அவர்களின் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்தற்கான முதல் படியாக அமையும். ஆர்.கே.ஜியின் இந்நிகழ்வின் கனவை நனவாக்கியதில் SICA முக்கிய பங்காற்றியுள்ளது." என்றார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:
இந்த நிகழ்வில், சிறந்த நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு பின்வரும் வகைகளில் விருதுகள் வழங்கப்பட்டன:
அவையன,
மதுரை:
Best Hotel Management Institute: Subbalakshmi Lakshmipathy College of Science
Best Hotel: Grand Madurai by GRT Hotels
Best Restaurant: Cine Suvai
கோயம்புத்தூர்:
Best Hotel Management Institute: Hindustan College of Arts & Science
Best Hotel: The Residency Hotels
Best Restaurant: Haribhavanam Hotels
திருச்சி:
Best Hotel Management Institute: SRM Institute of Hotel Management
Best Hotel: Sangam Hotels Courtyard by Marriott Tiruchirapalli
சென்னை:
Best Hotel Management Institute: Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition, Tharamani