ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் கடன் வாங்குவதில் பெண்கள் தான் அதிகம்!. நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை..!!
நாட்டில் பெண்கள் அதிக கடன் பெறும் மாநிலங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் கடன் பெற விரும்புவதாகவும் தங்களது கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை நிதி ஆயோக்கின் மகளிர் தொழில்முனைவோர் தளமான டிரான்ஸ்யூனியன் சிபில் மற்றும் மைக்ரோசேவ் கன்சல்டிங் இணைந்து தயாரித்துள்ளது.
அதில், இளம்பெண்கள் கடன் கண்காணிப்பு போக்கிலும் முன்னணியில் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 56% அதிகரித்து வருகிறது. 2019 மற்றும் 2024 க்கு இடையில் கடன் தேடும் பெண்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளனர். அதன்படி, 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், பெண்கள் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 22% அதிகரித்துள்ளது. இந்த காலத்தில், 4 கோடி புதிய பெண்கள் கடன் பெற்றுள்ளதுடன், அவர்கள் தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4.7 லட்சம் கோடி மதிப்புள்ள கடனை பெற்றுள்ளனர்.

சிபில்-நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் பெண்கள் பெற்றுள்ள மொத்த கடன்களில் 38% gold loan ஆக உள்ளது. இது 2019 முதல் தங்கக் கடன் அளவுகளில் ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும்., இது பெண்கள் கடன் பெறுவதற்கான முன்னணி விருப்பமாக மாறியுள்ளது. 2019ஆம் ஆண்டில் 20 லட்சம் இருந்த பெண்கள் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் 2.7 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 60% பெண்கள் நகர் (semi-urban ) மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் மூலம் மாநகரங்களை தாண்டி பெண்கள் கடன் பெறுவதில் ஆழமான நிதி செயல்பாடு விரிவடைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
தனிநபர் நிதி கடன் அதாவது, தனிப்பட்ட கடன்கள், நுகர்வோர் பொருட்களுக்கான கடன்கள், வீடு மற்றும் வாகனக் கடன்கள் ஆகியவை பெண்கள் கடன் பெறும் முக்கியமான பிரிவாக உள்ளது. அவர்கள் 2024 ஆம் ஆண்டில் ரூ.4.8 டிரில்லியன் மதிப்புள்ள 4.3 கோடி கடன்களைப் பெற்றனர். இது அந்த ஆண்டில் பெண்கள் எடுத்த அனைத்து கடன்களிலும் 42 சதவீதமாகும். 2024 டிசம்பர் நிலவரப்படி, 27 மில்லியன் பெண்கள் தங்கள் கடனை கண்காணித்து வந்துள்ளனர். இது இது 2023 டிசம்பரில் இருந்த 1.9 கோடியை விட 42% அதிகரித்துள்ளது. தானாக கடன் கண்காணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 17.9% ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 19.4% ஆக உயர்ந்துள்ளது.
தங்களது கடன் வரலாற்றை கண்காணித்த பெண் கடன் வாங்குபவர்களில், 44% பேர் ஆறு மாதங்களுக்குள் தங்களது credit score முன்னேறுவதை கண்டுள்ளனர். குறிப்பாக, கடன் சரிபார்ப்பின் போது 90க்கும் அதிகமான நாட்கள் தவணை செலுத்த வேண்டிய பெண்களில், 17.5% பேர் குறைந்த கடன் தவணை வகைக்கு மாறினர், அதே நேரத்தில் 11.4% பேர் ஆறு மாதங்களுக்குள் நிலையான கடன் வாங்குபவர்களாக மாறியுள்ளனர்.
இருப்பினும், தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் 44% பெண்கள் கடன் வாங்குகின்றனர். தேசிய சராசரி அளவு 31% விட, பெண்கள் கடன் பெறும் அதிக மாநிலங்களில் தென் மாநிலங்கள் முன்னிலை பெற்றுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்கள் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10% வளர்ச்சியை கண்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 11% பெண்கள் தங்களது கடன் நிலையை தானாக கண்காணிக்கின்றனர். தென்னிந்திய மாநிலங்களிலும் இது அதிகமாக உள்ளதுடன், 10.16 மில்லியன் பெண்கள் தங்களது கடன்களை தனியாகவே கண்காணிக்கின்றனர். பெண்களுக்கு வழங்கப்படும் மொத்த வங்கிக் கடனில் 21.12% தமிழகத்திற்கு செல்கிறது, இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 5% இலக்கை விட மிக அதிகமாக உள்ளது.