சுவையான ராகி குக்கீஸ் செய்யலாம் வாங்க!

8 hours ago
ARTICLE AD BOX

ராகி, நம்முடைய பாரம்பரிய தானியங்களில் ஒன்று. இது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், ராகியை வெறுமனே கஞ்சியாகவோ அல்லது ரொட்டியாகவோ சாப்பிடுவதை விட, கொஞ்சம் வித்தியாசமாக, சுவையான குக்கீஸாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த ராகி குக்கீஸை வீட்டிலேயே செய்வது மிகவும் எளிது. இந்த எளிய செய்முறையைப் படித்து நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.

ராகி குக்கீஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு - 1 கப்

  • கோதுமை மாவு - 1/2 கப்

  • வெண்ணெய் - 1/2 கப்

  • சர்க்கரை - 1/2 கப்

  • ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

  • பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

  • பால் - 2-3 தேக்கரண்டி

  • முந்திரி மற்றும் பாதாம் - சிறிதளவு

செய்முறை:

முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் அறை வெப்பநிலையில் உள்ள வெண்ணெயை போட்டு நன்றாக கலக்கவும். வெண்ணெய் மிருதுவாக வந்தவுடன், பொடித்த சர்க்கரையை சேர்த்து மேலும் நன்றாக கலக்கவும். வெண்ணெய் மற்றும் சர்க்கரை இரண்டும் சேர்ந்து ஒரு கிரீம் போன்ற பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும்.

பிறகு, ராகி மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஒரு சல்லடையில் சலித்து, வெண்ணெய் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு கெட்டியாக இருந்தால், 2-3 தேக்கரண்டி பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்து மாவுடன் கலந்து விடவும்.

இதையும் படியுங்கள்:
பலாக்காய் மாவு உணவு சர்க்கரை நோயை குணமாக்குமா?
Ragi Cookies

பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டி குக்கீஸ் வடிவத்தில் வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, அதன் மேல் இந்த குக்கீஸ்களை இடைவெளி விட்டு அடுக்கவும். பின்னர் அதை மைக்ரோவேவ் அவனில் உள்ளே வைத்து சில நிமிடங்கள் வரை அல்லது குக்கீஸ் பொன்னிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.

குக்கீஸ் தயாரானதும் அவற்றை வெளியே எடுத்து நன்றாக ஆறிய பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வேலை மட்டுமல்ல; அதைப் பார்க்கும் சூழலும் நன்றாக இருக்க வேண்டும்!
Ragi Cookies
Read Entire Article