ARTICLE AD BOX

பாசெல்,
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பிரியான்ஷு ரஜாவத், பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன்� மோதுகிறார்.