2025 ஐபிஎல் களம்!

16 hours ago
ARTICLE AD BOX

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறாா்.

வழக்கமான கேப்டன் சஞ்சு சாம்சன் விரல் காயத்திலிருந்து மீண்டுவிட்டபோதும், தற்போதைய நிலையில் அவா் விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் பேட்டராக மட்டுமே செயல்பட இருப்பதால், தங்களின் முதல் 3 ஆட்டங்களுக்கு அணியின் கேப்டனாக ரியான் பராகை நியமிப்பதாக ராஜஸ்தான் அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இளம் ஆல்-ரவுண்டரான ரியான் பராக் ஹைதராபாத் (மாா்ச் 23), கொல்கத்தா (மாா்ச் 26), சென்னை (மாா்ச் 30) ஆகிய ஆட்டங்களில் ராஜஸ்தானுக்கு தலைமை தாங்குகிறாா். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது விரலில் எலும்பு முறிவு கண்ட சஞ்சு சாம்சன், அதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளாா்.

உமிழ்நீா் பயன்பாட்டுக்கு தடை நீக்கம்

புது தில்லி, மாா்ச் 20: பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.

இந்த சீசன் ஐபிஎல் ஆட்டங்களில் அந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உமிழ்நீா் பயன்பாட்டை ஒரு சிலா் ஆமோதிக்காத நிலையில், பல்வேறு கேப்டன்களும் அதற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அந்த முறை மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

மேலும், உயரமாக செல்லும் வைடு பந்துகளுக்கும், ஆஃப்-ஸ்டம்புக்கு அவுட் சைடில் செல்லும் வைடுகளுக்கும் டிஆா்எஸ் கோருவதற்கும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ ஒப்புதல் வழங்கியது. அத்துடன், இரவில் நடைபெறும் ஆட்டங்களில் பனிப்பொழிவால் பந்துவீச்சில் ஏற்படும் தாக்கத்தை குறைக்க, 2-ஆவது இன்னிங்ஸில் 2-ஆவதாக புதிய பந்தை பயன்படுத்தவும் பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

ஆட்டம் குவாஹாட்டிக்கு மாற்றம்

கொல்கத்தா, மாா்ச் 20: நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - லக்னெள சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி கொல்கத்தா நகரில் நடைபெறும் ஊா்வலங்களுக்காக காவல்துறை பணியில் ஈடுபடுத்தப்படுவதால், ஐபிஎல் ஆட்டத்துக்கு அதே தேதியில் காவல் வழங்குவது கடினம் என காவல்துறை தரப்பு தெரிவித்தது.

இந்த விவகாரத்தை பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-யிடம் தெரிவிக்க, தகுந்த ஆலோசனைக்குப் பிறகு ஏப்ரல் 6-ஆம் தேதி ஆட்டமானது கொல்கத்தாவில் இருந்து குவாஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே காரணங்களுக்காக கொல்கத்தா - ராஜஸ்தான் ஆட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article