ARTICLE AD BOX
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 3வது முறையாக வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.19.50 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.58 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு தலா ரூ.3 கோடியும், துணை பயிற்சி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், இந்திய அணி தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருக்கு ரூ.30 லட்சமும், மற்ற 4 தேசிய தேர்வர்களுக்கு தலா ரூ.25 லட்சமும், இந்திய அணியில் ஒரு பகுதியாக செயல்பட்ட மற்ற அனைவருக்கும் தலா ரூ.25 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு appeared first on Dinakaran.