ARTICLE AD BOX
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் சித்த மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆயுஷ் மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BUMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
மருந்து வழங்குநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: D.Pharm/ Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 750
பல்நோக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 300
சித்தா ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
சிகிச்சை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625014
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.