ARTICLE AD BOX
Maravalli Kilangu : மரவள்ளிக்கிழங்கின் மகத்தான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மரவள்ளிக்கிழங்கு என்பது கப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லா இடங்களிலும் கிடைக்கும். வறண்ட மற்றும் மலைப்பகுதிகளில் தான் இது விளையும். அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும். ஏன் பல் இல்லாதவர்கள் கூட இந்த கிழங்கு சாப்பிடுவதற்கு ஏற்றதாகும். இதில் இனிப்பு காரம் தோசை போன்ற ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மிதமான அளவில் சாப்பிட வேண்டும். இப்போது மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கலோரிகள், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், தாமிரம், தயமின், ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவை உள்ளன.

மரவள்ளிக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த அதிகரிக்கும் போது சோடியம் உட்கொள்ளலை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றது.
எடையை கட்டுக்குள் வைக்கும்:
எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மரவள்ளி கிழங்கு பெரிதும் உதவும். ஏனெனில் இதில் கலோரிகள், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து குடலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்களை உறிஞ்சி செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக இதில் இருக்கும் நார்ச்சத்து அதிகமாக உணவு சாப்பிடுவதை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. இது வயிறை நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வை அளிக்கிறது.

மரவள்ளிக்கிழங்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி அபாயத்தை குறைக்க உதவும். உயர் இரத்த அளவு, கொழுப்பு, இடுப்பு சுற்றி இருக்கும் கொழுப்பு போன்ற ஆபத்தை உண்டு பண்ணும் வளர்சிதை நோய்க்குறி அபாயத்தை குறைக்க உதவும்.
கண் பார்வையை மேம்படுத்தும்:
மரவள்ளிக்கிழங்கில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கண் பார்வையை மேம்படுத்த உதவும். எனவே, இதை தினமும் சாப்பிடுங்கள்.

வீக்கம், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட பிறகு உங்களது உதடு, நாக்கில் வீக்கம் ஏற்படும். மேலும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவமைக்கு சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.