ARTICLE AD BOX
தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, நியமனம் செய்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மார்ச் 17-ஆம் தேதி இது குறித்து முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வழக்கு
வழக்கு விவரங்கள்
முன்னதாக அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையில் 1997ஆம் ஆண்டில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி சம்பளத்தில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், தனது பணியை வரன்முறை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர். சுப்ரமணி மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தனர்.
இன்று இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் அரசாணை அடிப்படையில், 2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.