ARTICLE AD BOX
ஆப்பிள் உலகளவில் அதிகம் சாப்பிடப்படும் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அதை எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பது மிக முக்கியம். சரியான நேரத்தில் உண்பதால் அதன் மருத்துவப் பயன்களை முழுமையாகப் பெறலாம். அதே சமயம் தவறான நேரத்தில் உண்பது சில உபாதைகளை ஏற்படுத்தலாம். எந்த நேரத்தில் ஆப்பிள் சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
காலையில் ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகள்:
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
1. செரிமானத்தை மேம்படுத்தும் - ஆப்பிளில் அதிகளவில் பேக்டின் (Pectin) என்ற நார்ச்சத்து உள்ளது. இது குடலின் இயக்கத்தை சீராக்கி, மலச் சிக்கலைத் தடுக்கும். குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்தி, நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க உதவுகிறது.
2. உடல் எடையை கட்டுப்படுத்தும் - அதிக நார்ச்சத்து இருப்பதால், இது பசியை குறைத்து அதிக உணவு உட்கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆப்பிளில் உள்ள குறைந்த அளவிலான கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவும்.
3. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் - ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரை (fructose) இரத்தத்தில் இன்சுலின் நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
4. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் - ஆப்பிளில் பொலிஃபினால்கள் (Polyphenols) மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன.
இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இருதய நோய்களை தடுக்க உதவுகிறது.
இரவில் ஆப்பிள் சாப்பிடலாமா?
இரவில் ஆப்பிளை உட்கொள்வது சிலருக்கு நன்மை அளிக்கலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு சில எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
1. செரிமான பிரச்சனைகள் - இரவில் செரிமானம் மந்தமான நிலையில் இருக்கும். ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து செரிக்க அதிக நேரம் பிடிக்கலாம்.
இது வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
2. இரத்த சர்க்கரை அதிகரிப்பு - இரவில் உடல் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால், ஆப்பிளில் உள்ள சர்க்கரை உடலில் சரியாக பிரிக்கப்படாது. இது நீரிழிவு உள்ளவர்களுக்கு ஆபத்தாக இருக்கும்.
3. நச்சுச்சத்துக்கள் அதிகரிக்கரிப்பு - இரவில் ஆப்பிள் சாப்பிடும்போது, அதன் நார்ச்சத்து குடலில் தேங்கி, நீரிழிவு மற்றும் எடையைக் கூட அதிகரிக்கலாம்.
ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
* காலை (7-10 AM)- சிறந்த நேரம். உடலுக்கு அதிக சக்தி, நல்ல செரிமானம்
* மதியம் (12-2 PM)- சராசரி -சிற்றுண்டியாக உகந்தது
* மாலை (4-6 PM)- சராசரி - உடல் சோர்வை நீக்கும்
* இரவு (8-10 PM)- தவிர்க்கலாம் - செரிமானம் பாதிக்கலாம், இரத்த சர்க்கரை அதிகரிக்கலாம்.
ஆப்பிளை சிறந்த முறையில் உண்பது எப்படி?
* புதிய, பசுமையான ஆப்பிளை தேர்வு செய்யுங்கள்.
* தோல் நீக்காமல் சாப்பிடுவது நன்மை தரும் (தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது).
* பசை (wax) பூசப்பட்ட ஆப்பிள்களை சாப்பிடும் முன் நன்றாக கழுவவும்.
* ஆப்பிளை ஜூஸாக சாப்பிடுவதற்குப் பதிலாக முழுமையாகக் கடித்து சாப்பிடுவது நல்லது.