சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”

6 hours ago
ARTICLE AD BOX

திமுக அரசு டாஸ்மாக் ஊழல் செய்ததாக தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டததை பாஜகவினர் எடுத்த நிலையில், அண்ணாமலை , தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் . மாலை 6 மணி ஆகியும் விடுதலை செய்யப்படாத நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தை எடுத்தனர் பாஜகவினர். இதையடுத்து, மாலை 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்டவுடன் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “  ரூ. 1,000 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள டாஸ்மாக் ஊழலின் A1 குற்றவாளி ஸ்டாலின் கீழ் செயல்படும் திமுக காவல்துறை, தமிழக பாஜகவின் இன்றைய டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தை எப்படியாவது முடக்கவேண்டும் என்று படாத பாடுபட்டது. ஸ்டாலின் அவர்களே, உங்கள் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.

காவல்துறையினருக்கு ஒத்துழைப்புடன் பாஜக செயல்பட்டது. ஆனால், காவல்துறையினர் எல்லை மீறி செயல்பட்டிருக்கிறது. இனி காவல்துறையை தூங்க விட மாட்டோம். வித்தியாசமான போராட்டத்தை எடுப்போம்.

மேலும், அடுத்த ஒரு வாரத்தில் மதுக்கடைகள் முன்பு, மகளிர் அணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி , போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம் என காட்டமாக பேசியிருக்கிறார் அண்ணாமலை.

மேலும், தவெக தலைவர் விஜய் குறிததும் தாக்கிப் பேசியிருக்கிறார். நாடகம் போடுவது விஜய்,ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செய்கிறார், விஜய்யை போன்று இடுப்பைக் கிள்ளி அரசியல் செய்கிறேனா, நாடகம் போடுவது விஜய், திமுகவின் பி டீம் விஜய்.  வொர்க் ஃபரம் ஹோம் பாலிடிக்ஸ் பன்னிகிட்டு , பேச கூடாது என்ற வகையில் விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார் அண்ணாமலை.

Read Entire Article