சீமான் மீதான பாலியல் வழக்கு : மனைவி காயல்விழி பரபரப்பு பேட்டி

5 hours ago
ARTICLE AD BOX

Seeman, Kayalvizhi seeman | சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரில் காவல்துறை சம்மன் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து மனைவி கயல்விழி சீமான் பேட்டியளித்துள்ளார். அதில், இந்த வழக்கில் சீமானை அசிங்கப்படுத்துவதற்காகவே காவல்துறை நடந்து கொள்வதாகவும், அவர்கள் வியாழக்கிழமை நடந்து கொண்ட விதம் தவறானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரை சீமான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சீமான் வீட்டில் நடந்தது என்ன?

நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரில் நீதிமன்றம் விசாராணையை துரிதப்படுத்த உத்தரவிட்டிருக்கும் நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்று அழைப்பாணை ஒட்டினர். இதனை சீமான் வீட்டில் இருக்கும் காவலாளி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இது குறித்து நீலாங்கரை காவல்துறை விசாரிக்க சென்றபோது, அவர்கள் தடுத்ததால் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இருவருக்கும் சோளிங்கர் நீதிமன்றம் மார்ச் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சீமான் இன்று ஆஜர்

இதனைத் தொடர்ந்து சீமான் இன்று நடிகை பாலியல் வழக்கில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரவார் என கூறப்படுகிறது. நேற்று ஓசூரில் பேட்டியளித்த சீமான், விசாரணைக்கு எல்லாம் ஆஜராக முடியாது, உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்குங்க என பேசினார். இந்த சூழலில் சீமான் இன்று விசாரணைக்கு ஆஜரவார் என தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது.

மனைவி கயல்விழி சீமான் பேட்டி

இந்த விவகாரம் குறித்து மனைவி கயல்விழி சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வளசரவாக்கம் காவல்துறை ஒட்டிய அழைப்பாணையை தான் தான் கிழிக்க சொன்னதாகவும், அதற்காக எங்கள் வீட்டில் வேலை செய்தவர்களை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றிருப்பதாகவும் கூறினார். ”வளசரவாக்கம் காவல்துறையினர் வீட்டின் கதவில் ஒட்டிவிட்டுச் சென்றனர். வெளியே வந்து அதனை படிக்க எனக்கு சங்கட்டமாக இருந்ததால், நான்தான் சம்மனை எடுத்து வரச் சொன்னேன். அதனை எடுக்க முடியாததால், கிழிக்க நேரிட்டது. என்னை கைது செய்யாமல் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

சட்டப்படி எதிர்கொள்வார் சீமான்

நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் வந்தபோது, நாங்கள் கதவை திறக்க முடியாது என்று கூறவில்லை. முன்னாள் ராணுவ வீரரிடம் அவர் அப்படி நடந்துகொண்டது முறையில்லை. ஆய்வாளர் பிரவீன் வேண்டுமென்றே இப்படி செய்கிறார். காவல்துறையினர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், நேற்று அவர்கள் நடந்துகொண்டது ஏற்றுக் கொள்ளமுடியாதது. மேலிடத்தின் அழுத்தத்தால் இவ்வாறு செய்துள்ளனர்.

காவலர் வைத்திருந்த துப்பாக்கியை போலீஸிடம் கொடுக்கவே வெளியே எடுத்தார். மிரட்டுவதற்காக இல்லை. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அடித்துள்ளனர். ஆய்வாளர் பிரவீன் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்வோம். சீமான் பல வழக்குகளை எதிர்கொண்டு வருவதால் எங்களுக்கு வழக்கின் மீதெல்லாம் பயமில்லை. சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வோம். எத்தனையோ வழக்கு இருந்தும் பாலியல் வழக்கு போட்டு அவரை அசிங்கப்படுத்தவே இதனை செய்கிறீர்கள். இதைத் தவிர இதில் வேற உள்நோக்கம் ஏதும் இல்லை என்பது தெரிகிறது” என கயல்விழி சீமான் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | நடிகை விஜயலட்சுமி தொடர்பான விவகாரம்.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேலும் படிக்க | என்னால ஆஜராக முடியாது...? உங்களால என்ன செய்ய முடியும்...? சீமான் பகீர் பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article