ARTICLE AD BOX
ஆரஞ்சு சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் அதிக அளவு சி சத்து இருப்பதால் அதிக அளவு மெலானின் உற்பத்தியை தடுக்கிறது. கருந்திட்டு மற்றும் பிக்மேண்டேஷனை தடுக்கிறது. மேலும் கொலாஜனை அதிகரித்து மேனியை பளபளப்பாக்கிறது.
முகத்தில் கோடுகள் விழாமல் பாதுகாக்கிறது. வயதாகும்போது கொலாஜன் குறைகிறது. அதனால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஆரஞ்சில் உள்ள ஃபைப்ரோப்ளாஸ்ட்ஸ் கொலாஜனை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் இளமை பெறுகிறது.
முகப்பருவை போக்கக்கூடிய ஆஸ்ட்ரின்ஜென்ட் பண்பு கொண்ட சிட்ரிக் அமிலம் இதில் அதிகம் உள்ளதால் பரு பிரச்னை தீருவதுடன் அழற்சி எதிர்ப்பு பண்பும் இருப்பதால் சருமத்தின் தன்மையை ஆரோக்கியமாக வைக்கிறது.
சருமத்தை மென்மையாக வைக்க ஈரப்பதம் அவசியம். இது சருமத்தை நல்ல நீரேற்றத்துடன் வைக்கிறது. இதில் இயற்கையான நீர்சத்து சர்க்கரை சத்து சருமத்தை வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.
ஆரஞ்சு தோல்களின் பயன்பாடு…
ஆரஞ்சு தோல் பௌடர் ஃபேஸ் பேக் ஆரஞ்சு தோலை நன்கு காயவைத்து பொடி செய்யுங்கள். இது ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் தேன், தண்ணீர், ரோஸ் வாட்டர், யோக்ஹர்ட் போன்றவற்றைச் சேர்த்து இதை முகத்திலும் கழுத்திலும் தடவவும் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
ஆரஞ்சு ஜுஸ் டோனர்
சம அளவு ஆரஞ்சு ஜுஸ் மற்றும் தண்ணீர் கலந்து பஞ்சு உருண்டையால் முகத்தில் தடவி பிறகு கழுவவும்.
ஆரஞ்சு தேன் ஃபேஸ் பேக்
இரண்டு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜுசுடன்ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி 25 நிமிடம் கழித்துக்கழுவவும்.
ஆரஞ்சு மற்றும் யோக்ஹர்ட் மாஸ்க்
இரண்டு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜுசுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் யோக்ஹர்ட் சேர்க்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஆரஞ்சு பீல் ஸ்க்ரப்
ஆரஞ்சு தோலியை காரட் துருவியின் துருவுங்கள். இத்துடன் ஓட்ஸ் மற்றும் தேங்காய் எண்ணை சேர்க்கவும் இதைக் கொண்டு சர்குலர் போனில் முகத்தில் மசாஜ் செய்யுங்கள். பிறகு கழுவிவிடவும்.
ஆரஞ்சு ஆலோவேரா ஜெல் மாஸ்க்
ஆரஞ்சு ஜுஸ் மற்றும் ஆலோவேரா ஜெல் இரண்டும் சமஅளவு கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும்.
ஆரஞ்சு ஃபேஷியல் ரப்
ஆரஞ்சை இரண்டாக அரிந்து முகம் முழுக்க தேய்க்கவும். பத்து நிமிடம் கழித்து கழுவலாம். மேற்கூறியவற்றை கடைபிடித்தால் கண்ணாடி மேனி பெறலாம்.