சீனிவாச ராவ் மகன் சென்னையில் காலமானார்!

8 hours ago
ARTICLE AD BOX

எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது 5 மாவட்டங்களாகப் பிரிந்துகிடக்கும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்குரலாய் ஒலித்தவர், கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாச ராவ். அவருடைய மகன் எஸ்.ராஜசேகரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.  

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலையில் காலமானார்.

பி. சீனிவாச ராவ் - ஆசிரியர் நாச்சாரம்மாள் தம்பதியரின் மகன் எஸ்.ராஜசேகரன்,  புரசைவாக்கம் பகுதியில் கேபிள் டிவி தொழில் நடத்தி வந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் காலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார்.

காலமான எஸ்.ராஜசேகருக்கு, பிரேமலதா, சுமதி என சகோதரிகளும், வாழ்விணையர் பொன்னி, மகள் மிருதுளா சிந்து, மகன் அமிர்ரூத் ஆகியோரும் இருக்கிறார்கள்.

சென்னை பெருநகர், 913 ஏ, ஜெ பிளாக், 19-வது தெரு, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை 18.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article