சிவாஜி கண்ணுலயே விரலை விட்டு ஆட்டுனவரு அவரு... பழம்பெரும் நடிகை யாரைச் சொல்றாரு?

3 hours ago
ARTICLE AD BOX

சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினிகணேசன், பாலையான்னு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை குட்டிபத்மினி. இவர் சிவாஜி குறித்துப் பேட்டி ஒன்றில் பேசுகையில் பல விஷயங்களைத் தெரிவித்தார். என்னன்னு பாருங்க.

சாயங்காலம் வரைக்கும் விட மாட்டாரு: சிவாஜி கூட இணைந்து பல படங்களில் நடிச்சிருக்கேன். அவரு வயதான பிறகு அவரு வீட்டுல போய் மணிக்கணக்கில் இருந்து பேசுவேன். அப்போ எனக்கு 21 வயசு இருக்கும். காலைல போனா சாயங்காலம் வரைக்கும் விட மாட்டாரு. அவரும் சரி. நாகேஷூம் சரி. பெரிய வீடு. அவரை நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஆனா சினிமாவைப் பத்திப் பேச ஆளு இல்ல.


இனிமே ஒரு ஹீரோ நோ: அவருக்கிட்ட டிசிப்ளின் கத்துக்கிட்டேன். காலைல 7 மணிக்கு சூட்டிங்னா 6.50மணிக்கு அவரு காரு வந்துடும். அந்தமாதிரி எல்லாம் இனிமே ஒரு ஹீரோ காருலாம் உள்ளே வரவே வராது. நான் எழுதி வேணா கொடுக்கிறேன். அந்த விக்கை வச்சிக்கிட்டு, கழுத்து நிறைய நகையைப் போட்டுக்கிட்டு சாரதா ஸ்டூடியோல இருப்பாரு. ஏசி கூட கிடையாது. அப்படியே வேர்த்து ஊத்தும். அப்படியான அந்த வெயில்ல செட்லயே தான் இருப்பாரு.

எம்ஜிஆர்: செட்டை விட்டு சிவாஜி சார் ரூமுக்குப் போய் அடுத்தக் காட்சிக்குக் கூப்பிடுங்கடான்னு சொன்னதா யாரும் சொல்லவே முடியாது. எம்ஜிஆர் அங்கிளாவது நிறைய கட்சிக்காரங்க வருவாங்க. ஷாட் முடிஞ்ச உடனே மரத்தடியில உட்கார்ந்து கட்சிக்காரங்கக் கூட பேசுவாரு.

பாலையா: ஆனா சிவாஜி அங்கிள் அந்த ஷாட்லதான் இருப்பாரு. அடுத்தவங்க எப்படி ஆக்ட் பண்றாங்கன்னு பார்த்துக்கிட்டே இருப்பாரு. அதையும்தாண்டி அவரு கண்ணுல விரல விட்டு ஆட்டுன ஆக்டர்னா அது பாலையா அண்ணன். ரிகர்சல்ல பண்ணதை டேக்ல பண்ணவே மாட்டாரு. ரிகர்சல்ல பத்து தடவை பார்ப்பாரு.

பொறாமை கிடையாது: ஆனா டேக்ல அவரு பண்றதை கட் பண்ணவே முடியாது என்கிறார் குட்டி பத்மினி. அந்த வகையில் சிவாஜியே பல முறை சொல்வாராம். பாலையா, எஸ்.வி.சுப்பையா, நாகேஷ் எல்லாம் நடிக்க வராங்கன்னா நான் உஷாரா ஆகிடுவேன். தயாராகிடுவேன்னு சொல்வாராம். ஆனா அது பொறாமை கிடையாது. சிரிச்சிடுவாரு என்கிறார் குட்டி பத்மினி. 

Read Entire Article