ARTICLE AD BOX

நயன்தாராவின் ஆவணப்பட வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..
நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற இணைய தொடர் நெட்பிளிக்ஸில் வெளியானது.
இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ பட காட்சி சில நொடிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நயன்தாராவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 22-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து, தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால், இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
இதற்கு தனுஷின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் தயாரிப்பாளருக்கு சொந்தம். இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும்போது, அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார். படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது’ என வாதிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரிய நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது எனக்கூறி நெட்பிளிக்ஸ் மனுவை நிராகரித்தனர்.
இதைத்தொடர்ந்து வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஏப்ரல் 9-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

The post தனுஷ்-நயன்தாரா ஆவணப்பட வழக்கு: இறுதிக்கட்ட விசாரணை.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.