Flashback : ஒரு காட்சிக்காக அஜித்திடம் கெஞ்சிய மாரிமுத்து...முடியவே முடியாதுனு சொன்ன அஜித்

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் தனது ரசிகர்களை மதிப்புடன் நடத்தும் நல்ல மனிதராகவும் அஜித் நிஜ வாழ்க்கையில் இருந்து வருகிறார். அஜித் தற்போது கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கியுள்ளது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

குட் பேட் அக்லி

கடந்த மாதம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , த்ரிஷா , யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள் .

மீசையை எடுக்கமாட்டேன் என அடம்பிடித்த அஜித்

அஜித் நடித்து எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அண்ணன் தம்பி என இரு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் அஜித். தம்பியின் மனைவியின் மேல் ஆசை வைக்கும் அண்ணன் தனது சொந்த சகோதரனையே கொல்லும் எல்லை வரை செல்வதே படத்தின் கதை. ஹீரோ அஜித்தைவிட இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இப்படம் குறித்து மறைந்த நடிகர் ஜி மாரிமுத்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

" வாலி படத்தில் நாங்கள் நினைத்த நிறைய காட்சிகளை எங்களால் எடுக்க முடியவில்லை. படத்தில் தனது கணவன் என நினைத்து அண்ணன் அஜித்தை கட்டிப்பிடித்து விடுவார். இதனால் சிம்ரன் ரொம்ப குழப்பத்தில் அமர்ந்திருப்பார். அப்போது தம்பி அஜித் தனது மீசையை  எடுத்துவிட்டு வருவார். மீசை இருப்பது தனது அண்ணன் என்றும் மீசை இல்லாதது தான் என்று அடையாளம் காண அவர் இப்படி செய்வார். ஆனால் தம்பியைப் போலவே அண்ணன் அஜித்தும் மீசையை எடுத்துவிடுவார். இந்த காட்சியை எடுக்க அஜித் சார் சம்மதிக்கவில்லை. அவர் அப்போது வேறு ஒரு படத்தில் நடித்து வந்ததால் தனது மீசையசை எடுக்க மறுத்துவிட்டார். படப்பிடிப்பு முடிந்து கடைசியாக கூட எடுத்துக் கொள்ளலாம் என அவரிடம் கெஞ்சி பார்த்தோம். ஆனால் அஜித் சம்மதிக்கவில்லை. " என மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

Read Entire Article