சிறுகதை: பர்ஸ்!

2 hours ago
ARTICLE AD BOX

முருகன் ஒரு வருடமாக டீ கடை நடத்தி வருகிறான். முருகனின் அதிர்ஷ்டமோ என்னமோ அவன் கடை இருக்கும் பகுதியில் எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். கடைக்கு அடுத்த தெருவில் ஆண்கள் பயிலும் கல்லூரி இருப்பதால் பிற்பகல் மற்றும் மாலை கல்லூரி இடைவேளை நேரங்களில் முருகன் கடையில் மாணவர்கள் கூட்டம் அலைமோதும்.

ஒரு நாள் முருகன் கடையில் காலையில் பத்து மாணவர்கள் டீ அருந்தி கொண்டிருந்தார்கள், அப்போது அதே நேரம் மற்றொரு மாணவர் பட்டாளம் டீ கடைக்கு வந்த போது, ஏதோ ஒரு காரணத்தால் அவர்களிடையே  வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சற்று கீழே விழுந்து புரள்வது போல் அவர்கள் சண்டை முற்றியதால் அருகே இருந்தவர்கள் தலையிட்டு அந்த மாணவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். முருகனோ இதையெல்லாம் பார்த்து உறைந்த நிலையில் பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்தான். காரணம் முருகன் இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்டவன் மற்றும் இதற்கு முன்பாக இது போன்ற சம்பவம் அவன் கடைக்கு எதிரே நடந்தது இல்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; எனக்கென்று என்ன தந்தாய் அம்மா...
 Purse!

சிறிது நேரம் கழித்து டீ கடைக்கு வந்த நபர் கீழே கிடந்த ஒரு மணி பர்ஸ் எடுத்தார். அருகில் இருந்தவர்களிடம் இது உங்களுடையதா என்று கேட்டார்?. அப்போது சிலர் அந்த பர்ஸை வாங்கி சோதித்துப் பார்த்து திரும்பி அவரிடமே கொடுத்தனர்.

பின் அந்த நபர் கடை நடத்தும் முருகனிடம் “முருகா நான் வந்த போது உன் கடைக்கு முன் இந்த பர்ஸ் இருந்தது. தவற விட்டவர் கண்டிப்பாக வருவார் அவரிடம் கொடுத்துவிடு” என்று கூறி முருகனிடம் பர்ஸை கொடுத்தார்.

முருகன் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்ததால் அந்த பர்ஸை வாங்கி தன் கல்லா பெட்டியில் போட்டான். சிறிது நேரம் கழித்து கடைக்கு வரும் கூட்டம் குறைந்த பிறகு தன் கல்லா பெட்டியை திறந்து அந்த பர்ஸை  எடுத்து பார்த்தான். அதில் ரொக்கமாக நிறைய ரூபாய் நோட்டுகள் இருந்தன. உரிமையாளர் சம்பந்தப்பட்ட விவரம் இருக்கிறதா என்று தேடியபோதுதான் அதில் ஒரு போட்டோ இருந்ததைப் பார்த்தான். அதை பார்த்த போது முருகன் அதிர்ச்சி ஆனான். காரணம் அந்த போட்டோவில் இருந்த நபர் தான் காலையில் முருகன் கடைக்கு முன் நிகழ்ந்த சண்டைக்கு காரணமானவன். சரி எப்படி இருந்தாலும் இந்த மாணவன் கடைக்கு வருவான் என்று அந்த பர்ஸை மறுபடியும் கல்லாப்பெட்டியில் வைத்தான். ஆனால் அன்றைய நாள் அந்த மாணவன் வரவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஈ... ஈ... பேஸ்ட்!
 Purse!

டுத்த நாள் முருகன் கடையை திறந்து அந்த பர்ஸை கண்டிப்பாக கொடுத்து விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான். ஆனால் பிற்பகல் வரை அந்த மாணவன் வரவில்லை. “இது ரொம்ப காலம் நம்மிடம்  இருந்தா  சரி பட்டு வராது” என்று கருதி டீ கடைக்கு வந்திருந்த ஒரு மாணவனை கூப்பிட்டு "இந்த பர்ஸ் உன் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவனுடையது. அவனிடம் கொடுத்து விடு" என்று கூறினார்.

மறுநாள் பர்ஸ் உரிமையாளரான அந்த மாணவன் டீ கடைக்கு தன் நண்பர்களோடு வந்து முருகனிடம் “ஹலோ! சார், ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று கேட்டான்”

முருகன் “ஆயிரமா எதுக்கு?" என்று கேட்க 

அந்த மாணவன் “நீ தராமா வேறு யார் தருவார்? நீ தான் என்னுடைய பர்ஸை என்னிடம் கொடுக்க சொன்னதாக என் கல்லூரி நண்பன் என்னிடம் கூறினான். நீ உதவி செய்திருந்தால் நானே வந்து நன்றி கூறி இருப்பேன். ஆனால் நீ என்ன செய்திருக்கிறாய்? அதிலிருந்த ஆயிரத்தை தூக்கிவிட்டாயே!" என்று மரியாதை கொடுக்காமல் கோபமாக பேசினான்.

முருகன் “தம்பி மரியாதை ரொம்ப முக்கியம். உன் பர்ஸை திறந்து உன் விவரத்தை தான் பார்த்தேனே தவிர எந்த ரூபாயையும் நான் தொடவில்லை," என்றான். 

வந்த மாணவர்களில் ஒருவன் “இது பேசினா கிடைக்காதுடா; வேறு விதமாக தான் கேக்கணும்" என்று அடிக்க கை ஓங்கினான்.

அருகில் டீ அருந்தி கொண்டிருந்தவர்கள் தலையிட்டு, விவரத்தை கேட்டறிந்தனர். அவர்களின் அறிவுறுத்தலின் படி, கடைக்கு முன்னிருக்கும் ஒரு அலுவலகத்தின் சிசிடிவி கேமரா தரவுகளை ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில், பர்ஸ் தொலைந்த நாளில், முருகன் அருகில் இருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் அந்த பர்ஸை சோதித்து பார்ப்பது போல் ரூபாய் நோட்டை எடுப்பது  தெளிவாக தெரிந்தது. இதன் மூலம் யார் திருடன் என்ற முடிவும் கிடைத்தது.

இந்த கதையில் புரிந்து கொள்ளவேண்டியது.......

1) நம்மிடம் உண்மை இருக்கும் பட்சத்தில், நாம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் மனதை ஒருநிலை படுத்தி அந்நிலையை தில்லாக எதிர்கொள்ளலாம்.

2) எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக தெரிந்து கொண்ட பின்பே ஒருவரிடம் நம் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது. 

Read Entire Article