ARTICLE AD BOX
இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), பொறியாளர் பயிற்சியாளர் மற்றும் சூப்பர்வைசர் பயிற்சியாளர் பதவிகளுக்கான 400 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விபரம்: பொறியாளர் பயிற்சியாளர்கள் – 150, சூப்பர்வைசர் பயிற்சியாளர்கள் – 250 என மொத்தம் 400 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஊதியமாக 50,000 முதல் 90,000 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: பொறியாளர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய பொறியியல் துறையில் முழுநேர B.E./B.Tech./இரட்டை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சூப்பர்வைசர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் (SC/ST வேட்பாளர்களுக்கு 60%) தொடர்புடைய பொறியியல் துறையில் முழுநேர டிப்ளமோ பெற்றிருத்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 எனவும் அதிகபட்சம் வயது 27 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: விண்ணப்பதார்கள் கணினி அடிப்படையில் (CBT) மூலம் விண்ணப்பதாரரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மதிப்பீடு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மருத்துவத் தேர்வு: இறுதித் தேர்வு BHEL இன் மருத்துவ உடற்பயிற்சி தரநிலைகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தது. மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் careers.bhel.in என்ற அதிகாரப்பூர்வப் பக்கம் மூலம் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
The post B.E முடித்தவரா நீங்கள்? ரூ.90,000 வரை சம்பளம்.. BHEL நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.