சிறகடிக்க ஆசை முத்துவுக்கு குவியும் வாழ்த்து!

10 hours ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் வெற்றி வசந்த் இன்று(மார்ச் 20) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடரில் முத்து பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெற்றி வசந்த்.

இவர் யூடியூபில் பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் சிறகடிக்க ஆசை தொடர் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முன்னணியில் உள்ளது.

வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்ற தொடர்களின் டிஆர்பி புள்ளிகளைவிட சிறகடிக்க ஆசை தொடர் அதிகம் டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வாரந்தோறும் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவியை நடிகர் வெற்றி வசந்த் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், வெற்றி வசந்த் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விஜய் தொலைக்காட்சி வெற்றி வசந்த்தை பெருமைப்படுத்தும் விதமாக சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

நடிகர் வெற்றி வசந்த் உடன் நடிக்கும் சக நடிகர்கள், ரசிகர்கள் என அவருக்கு சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வருகிறது.

Read Entire Article