ARTICLE AD BOX
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தனது கணவன் மற்றும் மாமியார் மீது அதிக பாசத்தை கொட்டித் தப்பையெல்லாம் மறைக்கப் பார்க்கிறார். ஆனால், இடையில் முத்து மற்றொரு வேலை செய்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் பல பொய்களை சொல்லி ரோகிணி திருமணம் செய்தார். இது தெரியாமல், விஜயா அவரைத் தூக்கி வைத்து கொண்டாடுகிறார். அதேபோல், முத்து ரோகிணியின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வர போராடுகிறார்.
இப்படியான நேரத்தில், 30 லட்ச ரூபாய் பணத்தை ஏமாத்திட்டு போன கதிரை பார்த்த மனோஜ், கதிரை துரத்திட்டு போய் பிடிக்கப் பார்த்தார். ஆனால் கதிர், மனோஜிடமிருந்து எஸ்கேப் ஆகிய நிலையில் எதிர்பாராத விதமாக மனோஜ்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டது.
இந்த விபத்தின்மூலம் கண்பார்வைக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்று குடும்பமே பயப்படுகிறது. இதுதான் வாய்ப்பு என்று ரோகிணி, மனோஜிடம், உன்னை அப்படியே விட்டுவிடமாட்டேன். என் கண்ணையாவது கொடுத்து உன்னைக் காப்பாற்றுவேன் என்று பெரிய ஐஸாக எடுத்து போடுகிறார்.
இதில் உருகிப்போன மனோஜ், என்னுடைய உலகமே நீதான் எனக்கு உன்னுடைய அன்பு இருந்தால் போதும் என்று கூறுகிறார்.
ஏன் இப்படி விஜயாவுக்கும் மனோஜுக்கும் பாசத்தை கொட்டுகிறார் என்றால், இவள் மறைத்த உண்மைகள் வெளியே தெரிய வந்தால், கொஞ்சமாச்சு கருணை காட்டுவார்கள் என்றுதான்.
இதனை அடுத்து அண்ணாமலையின் நண்பர் பரசுராமனின் மகள் மற்றும் கசாப்பு கடை மணியின் சொந்தக்காரர் பையனுக்கும் கல்யாண வேலைகள் நடைபெற ஆரம்பித்துவிட்டது.
அப்போது கசாப்பு கடை மணியிடம் பரசுராமர் பேசும்போது, முத்துவுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது. இந்த குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது என்று மீனாவிடம் சொல்கிறார். அந்த வகையில் அந்த மணியை பார்த்தாக வேண்டும் என்று முத்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார். எப்படியும் இந்த கல்யாணத்தில் ரோகிணி போட்ட மலேசியா டிராமா முடிவுக்கு வந்துவிடும்.
அதற்காகதான் ரோகிணி முன்னெச்சரிக்கையாக பாச திட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.