ARTICLE AD BOX
விஜய் டிவி சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலே டிஆர்பியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த வாரம் சின்ன மருமகள் சீரியல் அதனை பின்னுக்கு தள்ளி உள்ளது.

Top 5 Vijay TV Serial TRP : சின்னத்திரை சீரியல்களின் வெற்றி தோல்வியை தீர்மாணிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். இந்த டிஆர்பி ரேட்டிங் வார வாரம் வெளியிடப்படும். அதன்படி 2025-ம் ஆண்டின் 10வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் விஜய் டிவி சீரியல்களில் வழக்கமாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை சின்ன மருமகள் சீரியல் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. அந்த சீரியல் முதலிடம் பிடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

சின்ன மருமகள் சீரியலுக்கு 9.3 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. கெத்தாக முதலிடத்தில் உள்ள அந்த சீரியலைக் காட்டிலும் 0.2 புள்ளிகள் கம்மியாக வாங்கி சிறகடிக்க ஆசை சீரியல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 9.1 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாக்கியலட்சுமி சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான இது 7.6 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... Pandian Stores: சண்டை போட்ட பழனி; குமரவேலுக்கு விழுந்த தர்ம அடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!

இதுவரை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் இருந்து 7 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல் 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அய்யனார் துணை சீரியல் 8.30 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நேர மாற்றம் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பின்னடைவாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் எஃபெக்ட் என்ன என்பது அடுத்த வாரம் டிஆர்பி நிலவரம் வெளிவரும் போது தெரியவரும்.

பாக்கியலட்சுமியை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் 6.8 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்ததாக புதிதாக தொடங்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் 5-ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 5.4 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக 9.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பான சீரியல்களில் நம்பர் 1 இடம் பிடித்த சீரியலாக ராஜா ராணி 2 இருந்த நிலையில், தற்போது சின்ன மருமகள் சீரியல் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவால் ரேவதி திருமணத்தில் நடக்கும் ட்விஸ்ட்! கார்த்திகை தீபம் அப்டேட்