ARTICLE AD BOX
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, தொண்டான்துளசி கிராமத்தின் வழியே காரில் பெண்கள், குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் பயணம் செய்தனர்.
சாலையில் வைக்கோல்களை விவசாயிகள் காயவைத்திருந்த நிலையில், காரின் சக்கரத்தில் சிக்கி வைக்கோல் தீப்பிடித்து, இறுதியில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: வேலூர் பெண் மருத்துவர் கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம்; 20 ஆண்டுகள் சிறை தண்டனை.!
காட்பாடி அருகே சாலையில் காய வைக்கப்பட்ட புற்களால், தீப்பிடித்து முழுவதும் சேதமான கார் - நூலிழையில் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர்
காய்ந்த புல் காரின் அடியில் சிக்கியதால், சாலையில் உரசிக்கொண்டே வரும் போது தீப்பிடித்து, காரில் தீ பரவியுள்ளது#SunNews | #Katpadi | #CarFire pic.twitter.com/0hXvndH7tP
கண்ணீருடன் கண்டனம்
நல்வாய்ப்பாக காரில் புகை வருவதை பார்த்து ஒருவர் காரை நிறுத்த அறிவுறுத்த, காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனால் ஆவேசமான காரில் வந்தவர்கள், தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
பல கி.மீ தூரம் சாலையில் வைக்கோல் வைத்துள்ளனர். தீப்பிடித்தது தெரிந்ததால் தப்பித்தோம். தெரியாமல் இருந்தால் உயிரே போயிருக்கும். மனசாட்சி வேண்டாமா? அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என ஆதங்கத்துடன் பேசினர்.
இதையும் படிங்க: #Breaking: இரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. தமிழ்நாடு முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!