சாம்பியன்ஸ் டிராபி: முன்னணி வீரர் விலகல்.. பாகிஸ்தான் அணிக்கு பலத்த பின்னடைவு

3 days ago
ARTICLE AD BOX

image courtesy: AFP

கராச்சி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதில் தொடக்க நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் நடப்பு சாம்பியன் ஆன பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதனால் எதிர்வரும் 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ளது.

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க முன்னணி வீரரான பஹர் ஜமான் பீல்டிங் செய்கையில் கால்முட்டியில் காயமடைந்தார். இதனால் எஞ்சிய தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இவரது பாகிஸ்தானுக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக இமாம் உல்-ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Read Entire Article