ARTICLE AD BOX
லாகூர்,
8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 325 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் எடுத்ததன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பென் டக்கெட்டின் (165 ரன்) சாதனையை இப்ராகிம் ஜட்ரான் முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
இப்ராகிம் ஜட்ரான் (ஆப்கானிஸ்தான்) - 177 ரன், 2025
பென் டக்கெட் (இங்கிலாந்து) - 165 ரன், 2025
நாதன் ஆஸ்டில் (நியூசிலாந்து) - 145* ரன், 2004