சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி

3 days ago
ARTICLE AD BOX

கராச்சி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

கராச்சியில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றியுடன் தொடங்கியது. இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

முன்னதாக ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடிகள் அங்குள்ள மைதானங்களில் ஏற்றப்பட வேண்டும் என்பது மரபு. ஆனால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடக்கும் பாகிஸ்தானில் இந்திய கொடி மட்டும் ஏற்றப்படாமல் இருந்தது.

இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய தேசிய கொடியை புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியது சர்ச்சை கிளப்பியது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஸ்டேடியங்களின் உச்சியில் இந்திய தேசிய கொடி நேற்று ஏற்றப்பட்டது. தொடக்க ஆட்டம் நடந்த கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி பறப்பதை காண முடிந்தது.

Read Entire Article