ARTICLE AD BOX

துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.