ARTICLE AD BOX
பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபியில், தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா.
தொடக்க வீரராக வந்து 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய ரியான் ரிக்கல்டன் 103 ரன்கள் அடித்து அசத்த, அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் டெம்பா பவுமா, வான்-டர் டஸ்ஸென் மற்றும் எய்டன் மார்க்ரம் 3 பேரும் அரைசதமடித்து அசத்தினர். 50 ஓவர் முடிவில் 315 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா அணி.
தென்னாப்பிரிக்கா படைத்த சாதனை..
இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 4 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்தனர். இந்த சாதனையை கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே அணியாக இந்தியா படைத்திருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப்போட்டியில் ரோகித் சர்மா 91 ரன்கள், விராட் கோலி 81 ரன்கள், ஷிகர் தவான் மற்றும் யுவ்ராஜ் சிங் இருவரும் 68, 53 ரன்கள் அடித்திருந்தனர். இந்தியா 319 ரன்கள் குவித்தது.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியா படைத்திருந்த பிரத்யேக சாதனையை, தென்னாப்பிரிக்கா மீண்டும் படைத்து அசத்தியுள்ளது.