சாம்பியன்ஸ் டிராபி 2025-  அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்ல முடியுமா? இது நடந்தால் போதும்

4 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு செல்ல இன்னும் மெல்லிய வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும், இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியை தழுவி இருக்கிறது.

இதன் மூலம் முதல் சுற்றிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதிக்கு செல்ல மெல்லிய வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது.அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

ஏ பிரிவு புள்ளி பட்டியல்:

தற்போது குரூப் ஏ புள்ளி பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகள் உடன் 0.64 ரன் ரேட் உடன் முதலிடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி 1.20 ரன் ரேட் உடன் இரண்டு புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்திலும், வங்கதேச அணி மைனஸ் 0.402 புள்ளிகள் ஏதும் இன்றி மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தான் அணி மைனஸ் 1.087 ரன் ரேட் உடன் பூஜ்ஜியம் புள்ளிகள் உடன் நான்காம் இடத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது ராவல்பிண்டியில்  நடைபெற்று வரும் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு பாகிஸ்தானும், வங்கதேசம் மோதும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா?

இது நடக்கும் பட்சத்தில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணி வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெறும்.

இதையும் படிங்க: இந்தியா vs பாக். சிறந்த பில்டிங்கிற்கான விருது.. டிரஸிங் ரூம்க்குள் வந்த பிரபலம்.. துள்ளி குதித்த வீரர்கள்

வங்கதேசமும் இரண்டு புள்ளிகள் பெறும். வங்கதேசத்தை  பாகிஸ்தான் வீழ்த்தும் பட்சத்தில் ரன் ரேட் அதிகம் இருந்தால் பாகிஸ்தான் அணி அப்போது அரை இறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி அடுத்து சுற்றுக்கு செல்வது என்பது இந்தியாவும் மற்றும் வங்கதேசம் கையில் தான் இருக்கிறது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய ஆணிகள் முதல் சுற்றில் இருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாம்பியன்ஸ் டிராபி 2025-  அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்ல முடியுமா? இது நடந்தால் போதும் appeared first on SwagsportsTamil.

Read Entire Article