சாம்பியன்ஸ் கோப்பை பி பிரிவில்: அரையிறுதிக்கு செல்வது யார்? ஆஸி – தெ.ஆ. கிரிக்கெட் போர்

3 hours ago
ARTICLE AD BOX

ராவல்பிண்டி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 8வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. சாம்பியன்ஸ் கோப்பைக்காக கடந்த 21ம் தேதி நடந்த ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை 107 ரன் வித்தியாசத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி வென்று அசத்தியது. 22ம் தேதி நடந்த போட்டியில் இங்கிலாந்து 351 ரன் குவித்தது. மிகக் கடினமான அந்த இலக்கை துரத்திய ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா 356 ரன் குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சேசிங்கில் புதிய சாதனை படைத்தது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் இங்லீஸ், மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் டவுரசிஸ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். அதே போல், தென் ஆப்ரிக்கா அணியில் பவுமா, டுசன், மார்க்ரம் ஆகியோருடன், பந்து வீச்சில் யான்சன், முல்டன், கேசவ் மகராஜ், ரபாடா உள்ளிட்டோர் மிரட்டல் விடுக்கும் வகையில் ஆடி வருகின்றனர். இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த முறை இந்த இரு அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

The post சாம்பியன்ஸ் கோப்பை பி பிரிவில்: அரையிறுதிக்கு செல்வது யார்? ஆஸி – தெ.ஆ. கிரிக்கெட் போர் appeared first on Dinakaran.

Read Entire Article