சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா அசத்தல் வெற்றி: ஷமி 5 விக்கெட், கில் சதம்

4 days ago
ARTICLE AD BOX

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. சௌம்யா சர்க்கார், கேப்டன் சாண்டோ ரன் எதுவும் எடுக்காமலும், ஹசன் மிராஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, அக்சர் பட்டேல் பந்துவீச்சில் தன்சித் ஹசன் 25 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹீம் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் பெவிலியன் திரும்பினர். ஹாட்ரிக் பந்தை ஜாகர் அலி சந்தித்தார்.

அக்சர் பட்டேல் வீசிய பந்து பேட்டின் விளம்பில் பட்டு ஸ்லிப்பில் இருந்த கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் சென்றது. எளிமையான கேட்ச்சை ரோகித் சர்மா தவறவிட்டார். வங்கேதச அணி 35 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 6வது விக்கெட்டுக்கு டவ்ஹித் ஹிரிடோய், ஜாகிர் அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடி ஜாகிர் அலி 68 ரன்னில் ஆட்டமிழக்க, ஹிரிடோய் நிதனமாக விளையாடி சதம் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 228 ரன் எடுத்தது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 5, ஹர்ஷித் ராணா 3, அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 229 ரன் இலக்கை நோக்கி இந்தியா அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 41 ரன், கோஹ்லி 22 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன், அக்சர் பட்டேல் 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. கில் 101 ரன், ராகுல் 41 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரோகித் 11,000 ரன்கள்

கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டியில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை நேற்று எட்டினார். இந்த சாதனையை விரைவாக எட்டும் 2வது வீரர் ரோகித் சர்மா (261 இன்னிங்ஸ்). 222 இன்னிங்சில் 11,000 ரன்களை அடித்து விராட் கோஹ்லி முதல் இடத்தில் உள்ளார். கோஹ்லி 11,831 பந்துகளிலும், ரோகித் சர்மா 11,868 பந்துகளில் 11,000 ரன்களை எடுத்து உள்ளனர். சச்சின் 276 இன்னிங்சில் 11,000 ரன்கள் எடுத்திருந்தார். இவரது சாதனையை ரோகித் சர்மா முறியடித்து உள்ளார்.

ஷமி 200 விக்கெட்

வங்கதேசத்துக்கு எதிராக தனது 104 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகள் மைக்கல்லை எட்டினார். மிக குறைந்த போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் சக்லேன் முஸ்டாக் (104 போட்டி) உடன் பட்டியலில் இணைந்தார். 102 போட்டியில் 200 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் ஆஸ்திரேலியா வீர்ர் மிட்செல் ஸ்டார்க் உள்ளார். 5240 பந்துகளில் இந்த சாதனை ஸ்டார்க் படைத்திருந்தார். ஆனால், முகமது சமி 5126 பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் சாதனையை முறியடித்து உள்ளார்.

* ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று தனது 200வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

The post சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா அசத்தல் வெற்றி: ஷமி 5 விக்கெட், கில் சதம் appeared first on Dinakaran.

Read Entire Article